பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
அடுத்த தலைமுறை நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்த தேசிய மாநாடு ஜூலை 13, 14 தேதிகளில் ஷில்லாங்கில் நடைபெறுகிறது
प्रविष्टि तिथि:
12 JUL 2026 3:06PM by PIB Chennai
மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள், பொது மக்கள் குறை தீர்ப்புத் துறை, மேகாலயா மாநில அரசுடன் இணைந்து, "அடுத்த தலைமுறை நிர்வாக சீர்திருத்தங்கள், மின்-ஆளுகை சீர்திருத்தங்கள்" என்ற கருப்பொருளில் இரண்டு நாள் தேசிய மாநாட்டை 2026 ஜூலை 13, 14 தேதிகளில் மேகாலயாவின் ஷில்லாங்கில் ஏற்பாடு செய்துள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், பொது மக்கள் குறை தீர்ப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கும், மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் கே. சங்மாவும் தேசிய மாநாட்டின் தொடக்க அமர்வில் உரையாற்றுகிறார்கள். இந்த மாநாடு, நாடு முழுவதிலுமிருந்து கொள்கை வகுப்பாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், நிர்வாக வல்லுநர்களை ஒன்றிணைத்து, பொது நிர்வாகம், டிஜிட்டல் ஆளுகை ஆகியவற்றின் எதிர்காலம் குறித்து விவாதிக்கும்.
மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், கொள்கை வகுப்பாளர்கள், துறைசார் வல்லுநர்கள், கல்வி நிறுவனப் பிரதிநிதிகள், பொது நிர்வாகத் துறை வல்லுநர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த தலைமுறை நிர்வாக சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்கு ஒரு தேசிய தளத்தை வழங்குவதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆளுகையில் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துதல், மக்களை மையமாகக் கொண்ட பொதுச் சேவை வழங்கலை வலுப்படுத்துதல், வெற்றிகரமான ஆளுகை மாதிரிகளைப் பின்பற்றுவதை ஊக்குவித்தல், வெளிப்படையான, திறமையான பொது நிர்வாகத்தை உருவாக்குவதல் ஆகியவற்றை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283853®=3&lang=1
***
(Release ID: 2283853)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2283885)
आगंतुक पटल : 17