குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

சமூக சீர்திருத்தவாதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான மன்னத்து பத்மநாபனின் சிலையை புது தில்லியில் குடியரசுத் துணைத்தலைவர் திறந்து வைத்தார்

மன்னத்து பத்மநாபனின் கொள்கைகள், சமூக நீதி, சமத்துவப் பாதையைத் தொடர்ந்து ஒளிரச் செய்கின்றன: குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன்

प्रविष्टि तिथि: 12 JUL 2026 2:15PM by PIB Chennai

குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், தில்லி நாயர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில், துவாரகாவில் உள்ள மன்னம் சர்வதேச மையத்தில், சமூக சீர்திருத்தவாதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான மன்னத்து பத்மநாபனின் சிலையை இன்று (12.07.2026) திறந்து வைத்ததோடு, மன்னம் ஸ்மிருதி மண்டபத்தையும் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், இந்த நிகழ்வை, வரலாற்றுச் சிறப்புமிக்க கொண்டாட்டம் என்று விவரித்தார். மன்னம் ஸ்மிருதி மண்டபத்தை நிறுவ வேண்டும் என்ற தமது நீண்டகால கனவை நனவாக்கியதற்காக தில்லியில் உள்ள நாயர் சேவை சங்கத்திற்கு வாழ்த்துத் தெரிவித்த அவர், இந்த நினைவகம் வெறும் ஒரு கட்டடம் மட்டுமல்ல எனவும், அது ஒரு நீடித்த பாரம்பரியத்தின் அடையாளம் என்றும் கூறினார். சாதி, பிராந்தியம், மதத்தைக் கடந்து நிற்கும் சமூக நீதி, சமத்துவம், தேசிய சேவை ஆகிய கொள்கைகளைக் கொண்ட ஒரு தொலைநோக்காளருக்குச் செலுத்தப்படும் அஞ்சலி இது என்றும் அவர் கூறினார். மன்னத்து பத்மநாபனின் கொள்கைகள், சமூக நீதி, சமத்துவப் பாதையைத் தொடர்ந்து ஒளிரச் செய்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

மன்னத்து பத்மநாபனின் வாழ்க்கை, அவரது பங்களிப்புகளை நினைவு கூர்ந்த திரு சி.பி. ராதாகிருஷ்ணன், சிறந்த சமூக சீர்திருத்தவாதியும், சுதந்திரப் போராட்ட வீரரும், நாயர் சேவை சங்கத்தின் நிறுவனருமான மன்னத்து பத்மநாபன், கல்வி, சமூக சீர்திருத்தம், தற்சார்பு, சமூக சேவை ஆகியவற்றின் மூலம் சமூகத்தின் மேம்பாட்டிற்காகத் தனது வாழ்நாளை அர்ப்பணித்தார் என்று கூறினார்.

மன்னத்து பத்மநாபனை சமூக மறுமலர்ச்சியின் உண்மையான தலைவர் என்று கூறிய குடியரசுத் குடியரசுத் தலைவர், அவரது தொலைநோக்குப் பார்வை சிறப்பானது என்றார்.  ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, மன்னத்து பத்மநாபனின் கொள்கைகள் கேரளாவையும் தாண்டி வெகுதூரம் பரவியிருப்பது குறித்து குடியரசுத் துணைத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

அந்த மாபெரும் சமூக சீர்திருத்தவாதியின் விழுமியங்களைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். சமத்துவம், கல்வி, கருணை, சேவை, தேசிய ஒற்றுமை ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற மன்னத்து பத்மநாபனின் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்வதே, அவருக்கு நாம் செலுத்தக்கூடிய மிகப்பெரிய அஞ்சலியாகும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, சுற்றுலாத் துறை இணையமைச்சர் திரு சுரேஷ் கோபி, தில்லி நாயர் சேவை சங்கத் தலைவர் திரு எம்.கே.ஜி. பிள்ளை உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283841&reg=48&lang=1

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2283861) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam