சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், சிறந்த நடைமுறைகள் குறித்த மாதாந்திர இணையவழி கருத்தரங்கை மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் தொடங்கி வைத்துள்ளது

प्रविष्टि तिथि: 11 JUL 2026 5:52PM by PIB Chennai

புதுமைகளை ஊக்குவித்து, பொது சுகாதார கட்டமைப்புக்களை வலுப்படுத்தும் வகையில், மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம், உலக மக்கள் தொகை தினம் 2026 அன்று, தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், சிறந்த நடைமுறைகள் குறித்த மாதாந்திர இணையவழி கருத்தரங்கைத் தொடங்கி வைத்துள்ளது. ஆண்டு முழுவதும் செயல்படும் அறிவுசார் பகிர்வு தளமாகத் திட்டமிடப்பட்டுள்ள இந்த முன்முயற்சி, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை ஒன்றிணைக்கும். இதன் மூலம் புதுமைகளை வெற்றிகரமாக  முன்னெடுக்கவும், செயல்பாட்டு அனுபவங்களைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளவும், நாடு முழுவதும் சுகாதார சேவையை வலுப்படுத்தக்கூடிய, சான்றுகள் அடிப்படையிலான, விரிவாக்கம் செய்யக்கூடிய நடைமுறைகளை விரைவாகச் செயல்படுத்தவும் வழி வகுக்கப்படும்.

மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரும் தேசிய சுகாதார இயக்கத்தின் செயல் இயக்குநருமான திருமதி ஆராதனா பட்நாயக் தலைமையில்  இதன் தொடக்க அமர்வு நடைபெற்றது.  இதில் உரையாற்றிய அவர், வலுவான பொது சுகாதார அமைப்புகளின் மையமாகப் புதுமைக் கண்டுபிடிப்புகள் திகழ்கிறது என்பதை வலியுறுத்தினார். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உருவாகும் புதுமையான நடைமுறைகளைக் கண்டறிந்து, ஆவணப்படுத்தி, பரவலாக்குவதற்கான ஒரு முக்கிய நிறுவன ரீதியான கட்டமைப்பாக இந்த இணையவழி கருத்தரங்குத் தொடர் அமையும் என்று அவர் குறிப்பிட்டார். இதன் மூலம், ஒரு பகுதியில் உருவாக்கப்பட்ட தீர்வுகள், நாடு முழுவதும் உள்ள சுகாதார அமைப்புகளுக்குப் பயனளிக்கும் வகையில் அமையும் என்று கூறினார்.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இதில் தீவிரமாகப் பங்கேற்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்ட  திருமதி பட்நாயக், தற்போதுள்ள திட்டக் கட்டமைப்புகளைக் கடந்து செயல்படும் புதுமைகளையும், உள்ளூர் அளவில் உருவாக்கப்பட்ட தீர்வுகள் மூலம், பொது சுகாதார சவால்களை எதிர்கொள்ளும் புதுமைகளையும் முன்வைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283687&reg=3&lang=1

****

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2283743) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी