அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

புதிய தேசிய கல்விக் கொள்கையானது, இளைஞர்களுக்கான வாய்ப்புகளை ஜனநாயகப்படுத்தியுள்ளது மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

प्रविष्टि तिथि: 11 JUL 2026 5:40PM by PIB Chennai

தோடா அரசு பட்டக் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த 2 நாள் மாநாட்டில் அறிவியல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று (11.07.2026) உரையாற்றினார். அவர் பேசுகையில், புதிய தேசிய கல்விக் கொள்கை 2020, திறனறிவு அடிப்படையிலான கற்றலை ஜனநாயகப்படுத்தியுள்ளதுடன், தோடா போன்ற இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்த மாணவர்கள், பெருநகர மாணவர்களுடன் போட்டியிடுவதற்கு ஒரு சமமான வாய்ப்பை உருவாக்கியுள்ளது என்றார்.

கட்டாயத்தின் பேரில் அல்லாமல், திறமையின் அடிப்படையில் மாணவர்கள் பாடங்களைத் தொடர அனுமதிப்பதன் மூலம், புதிய தேசிய கல்விக் கொள்கை, வழக்கமான கல்வியின் கடினத்தன்மையை உடைத்துள்ளது என்றும், அதே நேரத்தில் உயர்கல்வியின் கவனத்தை பட்டங்களிலிருந்து திறன்கள், புத்தாக்கம், தொழில்முனைவு ஆகியவற்றிற்கு மாற்றியுள்ளது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். தேசிய கல்விக் கொள்கை இந்தியாவின் இளைஞர்களை வளர்ந்து வரும் அறிவுசார் பொருளாதாரத்திற்குத் தயார்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

"ஜம்மு காஷ்மீரில் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ செயல்படுத்துதல்: உள்ளடக்கம், சமத்துவம், சவால்கள்" என்ற தலைப்பில் இணையவழியில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், சுதந்திர இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான கல்விச் சீர்திருத்தங்களில் ஒன்றான இது குறித்து சரியான நேரத்தில் ஒரு கல்விசார் கலந்துரையாடலை ஏற்பாடு செய்ததற்காக தோடா அரசு கல்லூரிக்கும், குறிப்பாக அதன் முதல்வர் டாக்டர் ஜாவேத் இக்பாலுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

இப்பகுதியின் கல்வி வரலாற்றை நினைவு கூர்ந்த டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த மாவட்டம் ஒரு வலுவான கல்விப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்றும், தனது நீண்டகால மரபை வளர்த்து, எதிர்கால சந்ததியினருக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் ஒரு முக்கிய கல்வி மையமாக உருவெடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும் கூறினார்.

கல்வி என்பது அரசு வேலைகளைப் பெறுவதற்கு மட்டுமே என்ற மனநிலையிலிருந்து நாடு முன்னேறியுள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். தற்போதைய காலகட்டம் திறன்கள், படைப்பாற்றல், புத்தாக்கம், தொழில்முனைவு ஆகியவற்றிற்கானது என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய காலகட்டம் இந்திய இளைஞர்களுக்கு மிகவும் நம்பிக்கையூட்டும் காலகட்டங்களில் ஒன்றாகும் என்று குறிப்பிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், தற்போது கல்வி பயிலும் தலைமுறை, 2047-ம் ஆண்டு சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவில் நாட்டை வழிநடத்தும் என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283683&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2283703) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी