நிலக்கரி அமைச்சகம்
சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு திட்டம் குறித்து அரசிதழில் அறிவிப்பு
प्रविष्टि तिथि:
10 JUL 2026 9:17PM by PIB Chennai
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனம், மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், மற்றொரு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன் முதன்மையான பெருநிறுவனங்கள் சமூகப் பொறுப்புணர்வு திட்டமாக மத்திய அரசின் அரசிதழில் அறிவிக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனத்தின் முதலாவது சமூகப் பொறுப்புணர்வு திட்டமாக மாறியுள்ளது.
ஆதார் (இலக்குடன் கூடிய நிதி, பிற மானியங்கள், பலன்கள், சேவைகளை) சட்டம், 2016, நல்லாட்சிக்கான ஆதார் அங்கீகார (சமூக நலன், புத்தாக்கம்,அறிவு) விதிகள், 2020 ஆகியவற்றின் விதிமுறைகளின் கீழ்,சமூகப் பொறுப்புணர்வுத் திட்டப் பயனாளிகளுக்கு ஆதார் அங்கீகாரத்தை அனுமதிக்கும் வகையில் மத்திய அரசிதழில் இதற்கான அறிவிப்பை மத்திய நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு, அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஆதார் அங்கீகாரம் மூலம் பயனாளிகளுக்குப் பலன்களை வெளிப்படையாகவும், திறமையாகவும், சரியான முறையில் சென்றடையவும் வழிவகுக்கிறது; அதேவேளையில், ஆதார் எண்ணைப் பயன்படுத்த விரும்பாதவர்களுக்கு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தும் வசதியையும் இது வழங்குகிறது.
2023-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தால் தொடங்கப்பட்ட சமூகப் பொறுப்புணர்வுத் திட்டம், அதன் முதன்மையானத் திட்டமாகும். இத்திட்டம், இந்த நிறுவனத்தின் செயல்பாட்டுப் பகுதிகளைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு இலவச தங்கும் வசதியுடன் கூடிய நீட் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியை வழங்குகிறது. இதன் மூலம், அவர்கள் மருத்துவம், அது சார்ந்த சுகாதாரத் துறைகளில், தங்களது தொழில்முறை சார்ந்த வாழ்க்கையைத் தொடர உதவுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283494®=3&lang=1
****
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2283664)
आगंतुक पटल : 10