இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்
இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் எதிர்கால உத்தி: தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கூட்டம்
प्रविष्टि तिथि:
10 JUL 2026 8:26PM by PIB Chennai
இந்தியத் தொலைத்தொடர்புத் துறையை உலகத் தரம் வாய்ந்த கண்டுபிடிப்பு மையமாக மாற்றும் நோக்கில், தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் நான்காவது கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது. மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அஜய் குமார் சூட் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், "தொடர்பு தொழில்நுட்ப பணிக்குழு" அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்குத் தொலைத்தொடர்பே அடித்தளம் என்பதால், 6ஜி, செயற்கை நுண்ணறிவு மற்றும் செமிகண்டக்டர் போன்ற துறைகளில் உள்நாட்டுத் திறனை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. தொழில்நுட்பங்களை ஆய்வகங்களிலிருந்து சந்தைக்குக் கொண்டு வரவும், இறக்குமதியைச் சார்ந்து இருக்காமல் இந்தியாவை ஒரு ஏற்றுமதி மையமாக மாற்றவும் அரசு மற்றும் தொழில்துறை இணைந்து செயல்பட இக்கூட்டம் வழிவகை செய்துள்ளது. இது நாட்டின் எதிர்கால டிஜிட்டல் இறையாண்மைக்கு முக்கியப் பங்காற்றும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283465®=3&lang=1
செய்தி அடையாள எண்: 2283465
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2283513)
आगंतुक पटल : 9