திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
வருங்கால வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப வகுப்பறைகள் அமைய வேண்டும்: அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி
प्रविष्टि तिथि:
10 JUL 2026 7:35PM by PIB Chennai
வருங்கால வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப இன்றைய வகுப்பறைகள் வடிவமைக்கப்பட வேண்டும் என்பதே எங்களது நோக்கம்" என்று மத்திய திறன் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் திரு. ஜெயந்த் சௌத்ரி குறிப்பிட்டார்.
'பிரதரின் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மாற்றத்திற்கான மேம்படுத்தப்பட்ட ஐடிஐ' திட்டத்தின் கீழ், குஜராத்தின் சூரத் ஐடிஐ கூட்டு அமைப்பாக செயல்பட மத்திய அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி இன்று ஒப்புதல் அளித்தார்.
இதற்கான நிகழ்வில் கலந்துகொள்ள சூரத் ஐடிஐ-க்கு வருகை தந்த அமைச்சர், தொழில்துறை நிறுவனமான ஆர்சிலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா மற்றும் அதன் கல்வி கூட்டாளியான நாம்டெக் ஆகியவற்றுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
நவீன உள்கட்டமைப்பு, ஸ்மார்ட் வகுப்பறைகள், மேம்படுத்தப்பட்ட ஆய்வகங்கள் மற்றும் பாடத்திட்டங்கள் மூலம் 25,000 மாணவர்களுக்குத் திறன் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி, "தொழில்துறை என்பது வெறும் வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனமாக மட்டும் இல்லாமல், திறமைகளை உருவாக்கும் இடமாக மாற வேண்டும் என கேட்டுக்கொண்டார்
எஃகு, பொறியியல், ஜவுளி மற்றும் தொழில் போன்ற வளர்ந்து வரும் துறைகளுக்குத் தேவையான பணியாளர்களை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். நாடு முழுவதும் 1,000 ஐடிஐ-களை மேம்படுத்தும் வகையில் ரூ. 60,000 கோடி பட்ஜெட்டில் செயல்படுத்தப்படும் பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாக கூட்டு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283434®=3&lang=1
செய்தி அடையாள எண் 2283434
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2283489)
आगंतुक पटल : 11