வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆந்திரப் பிரதேச எஃப்சிவி புகையிலை சந்தைப்படுத்துதல் பருவம்: வர்த்தகத் துறை ஆய்வு

இடுகை இடப்பட்ட நாள்: 10 JUL 2026 4:07PM by PIB Chennai

மத்திய வர்த்தகம்தொழில்துறை அமைச்சகத்தின் வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் திரு நிதின் குமார் யாதவ் தலைமையிலான உயரதிகாரிகள் குழுஆந்திரப் பிரதேச எஃப்சிவி புகையிலை சந்தைப்படுத்துதல் பருவம் (2025-2026) குறித்து ஹைதராபாத்தில் ஆய்வு நடத்தியது. இக்கூட்டத்தில் புகையிலை விவசாயிகள்உற்பத்தியாளர்கள்ஏற்றுமதியாளர்கள்வர்த்தகச் சங்கங்கள்புகையிலை வாரியப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். புகையிலை விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை அதிகாரிகள் தெரிவித்தனர். கொள்முதலை விரைவுபடுத்துதல்ஏற்றுமதியை எளிதாக்குதல்ஒட்டுமொத்த சந்தைப்படுத்துதல் உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும்புகையிலை வாரியத்தை மறுசீரமைத்தல்பதிவு நடைமுறைகளை எளிதாக்குதல்டிஜிட்டல் முன்முயற்சிகள்செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தரம் பிரித்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பல்வேறு நாடுகளில் ஏற்றுமதி சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல்பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவிப்பது குறித்தும் விவாதங்கள் நடத்தப்பட்டன. அனைத்துத் தரப்பினரின் ஒருங்கிணைந்த முயற்சிகள் இந்திய புகையிலைத் துறையின் உலகளாவிய போட்டித்திறனை வலுப்படுத்தும் என்று திரு நிதின் குமார் யாதவ் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283312&reg=3&lang=1

***

SS/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2283463) வருகையாளர் எண்ணிக்கை : 45
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , हिन्दी