சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இமாச்சல பிரதேசத்தின் கீலாங்கில் நடைபெறவிருந்த ஐசிஎம்ஆர் மருத்துவ ஆராய்ச்சி மைய அடிக்கல் நாட்டு விழா ஒத்திவைப்பு

प्रविष्टि तिथि: 10 JUL 2026 2:36PM by PIB Chennai

இமாச்சல பிரதேசத்தின் லாஹௌ மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள கீலாங்கில்நாளை (11.07.2026) நடைபெறவிருந்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் (ஐசிஎம்ஆர்) உயரமான மலை பகுதியில் அமைக்கப்படும் மருத்துவபொது சுகாதார ஆராய்ச்சி மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இப்பகுதியில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக இந்த விழா ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழைநிலச்சரிவு காரணமாகப் போக்குவரத்து வசதிகளும் பாதுகாப்பும் பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இதனால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283265&reg=3&lang=1

***

SS/PD/SH


(रिलीज़ आईडी: 2283393) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi