ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராய்பூரில் 250 மின்சார ரயில் என்ஜின்களுக்கு கூடுதல் பராமரிப்பு வசதிகளை ஏற்படுத்த 175 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு ரயில்வே ஒப்புதல்

प्रविष्टि तिथि: 10 JUL 2026 2:02PM by PIB Chennai

ரயில்வேயின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், தென்கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்திற்குட்பட்ட ராய்பூர் அதிதிறன் டீசல் எஞ்சின் பணிமனையில் 250 அதிநவீன மின்சார ரயில் எஞ்சின்களுக்குக் கூடுதல் இட வசதிகளை உருவாக்குவதற்கான திட்டத்திற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது.

இட வசதி என்பது ஒரு குறிப்பிட்ட ரயில் எஞ்சினை ஒரு குறிப்பிட்ட பணிமனைக்கு ஒதுக்குவதைக் குறிக்கும். இந்த முதன்மை பணிமனை மூலம் ரயில்களின் பராமரிப்பு, பாதுகாப்பு ஆய்வுகள், பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ரயில்கள் பாதுகாப்பாக இயக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. நாடு முழுவதும் மின்சார ரயில் எஞ்சின்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதற்கு ஏற்ப இந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ராய்பூர் பணிமனையில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படுவதன் மூலம் தற்போதுள்ள கட்டமைப்புகள் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு வருங்காலத் தொழில்நுட்ப விரிவாக்கத்திற்குத் தேவையான இடவசதியும் உருவாக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283249&reg=3&lang=1

***

SS/PD/KR


(रिलीज़ आईडी: 2283352) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada