சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஈடுசெய் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை, திட்டமிடல் ஆணையத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் கோயம்புத்தூரில் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 10 JUL 2026 1:18PM by PIB Chennai

ஈடுசெய் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை, திட்டமிடல் ஆணையத்தின் 7-வது நிர்வாகக் குழுக் கூட்டம் மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் கோயம்புத்தூரில் நடைபெற்றது.  

நாடு முழுவதும் ஈடுசெய் காடு வளர்ப்பை வலுப்படுத்துதல், வனப் பாதுகாப்பு, வனவிலங்குகள் பாதுகாப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட புதிய யோசனைகள், முன்முயற்சிகள் பற்றியும் ஆணையத்தின் ஒட்டுமொத்த செயல்பாடு குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் திரு கீர்த்திவர்தன் சிங், அமைச்சக மூத்த அதிகாரிகள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

2025-26-ல் ஈடுசெய் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை, திட்டமிடல் ஆணையம் பெற்ற நிதிநிலை, ஒப்புதல், செய்யப்பட்ட மாற்றம் போன்றவற்றுடன் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் செயல்படுத்திய தற்போதைய ஒட்டுமொத்த மதிப்பு மற்றும் ஈடுசெய் காடு வளர்ப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும், இந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.  

6 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் மாங்ரோவ் காடுகள் வளர்ப்பு, மீட்புக்காக ரூ.88.40 கோடி விடுவிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய நிர்வாகக் குழு, இந்தத் திட்டத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு (2029 வரை) நீடிப்பதற்கும் கூடுதலாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்வதற்கும் ஒப்புதல் அளித்தது.

நகர்ப்புற வனவளர்ப்புத் திட்டத்தின் கீழ், ரூ.571.50 கோடி விடுவித்து, 652 நகர்ப்புற வனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பசுமை பரப்பு விரிவாக்கத்திற்காக மரக்கன்று நடும் திட்டத்தை ஊக்கப்படுத்த இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி சபைக்கு ரூ.7.28 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.  இந்த முன்முயற்சிகளை அதிகப்படுத்த மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் நிர்வாகக் குழு ஊக்கப்படுத்தியது.

நாடு முழுவதும் சுமார் 15,000 புனித மரங்களைக் கொண்ட வனங்களைப் பாதுகாக்கவும், மீட்கவும் ரூ.3,000 கோடி தொகு நிதியத்துடன் 5 ஆண்டுகாலத்திற்கான (2026-27 முதல் 2030-31 வரை)  புனித வன பாதுகாப்புத் திட்டத்திற்கு நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தது.

ஆற்றுப் பகுதி டால்ஃபின்கள் பாதுகாப்பு, மீட்புத் திட்ட ஆய்வுகள், பனிச்சிறுத்தை 2-ம் கட்ட திட்டம் (2-ம் சுற்று கணக்கெடுப்பு உட்பட), இந்திய காண்டாமிருகங்கள் பாதுகாப்புத் திட்டம் உட்பட தேசிய ஆணையத்தின் நிர்வாகக் குழு பரிந்துரை செய்த புதிய வனவிலங்கு, வனப் பாதுகாப்புத் திட்டங்களுக்கும் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283233&reg=48&lang=1

***

AD/SMB/RJ/KR


(रिलीज़ आईडी: 2283298) आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR