ஆயுஷ்
azadi ka amrit mahotsav

தில்லி காடுகள் வளர்ப்பு திட்டம்: மூலிகைத் தாவரங்களை வளர்க்க மத்திய இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் வலியுறுத்தல்

प्रविष्टि तिथि: 10 JUL 2026 11:54AM by PIB Chennai

தில்லியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும், பசுமைப் பரப்பை விரிவுபடுத்துவதற்கும் தில்லி அரசு மேற்கொண்டுள்ள மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் திருமதி ரேகா குப்தாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், 70 லட்சத்திற்கும் அதிகமான உள்நாட்டு வகை மரங்களை நடுவது, 70 நீர்நிலைகளை மேம்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசமரம், ஆலமரம், வேம்பு, அர்ஜுன், நாவல் போன்ற உள்நாட்டு மரங்களை நடுவது தில்லியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்தும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை பொது சுகாதாரம், பாரம்பரிய மருத்துவத்துடன் இணைக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

திட்டமிடப்பட்டுள்ள காடுகளில் குறைந்தது 20 சதவீதப் பகுதியில் மூலிகைத் தாவரங்களை நட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் இரண்டு காடுகளைத் தனித்துவமான மூலிகைக் காடுகளாக உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283197&reg=3&lang=1

***

SS/PD/KR


(रिलीज़ आईडी: 2283291) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi