சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கோயம்புத்தூரில் மனித – வனவிலங்கு மோதல் குறித்த திறன்சார் மையத்தை மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தொடங்கிவைத்தார்

प्रविष्टि तिथि: 10 JUL 2026 11:26AM by PIB Chennai

கோயம்புத்தூரில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை மையத்தில் இன்று (10.07.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் மனித – வனவிலங்கு மோதல் குறித்த திறன்சார் மையத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து, மனித – வனவிலங்கு மோதல் குறித்த தேசிய பயிலரங்கையும் அவர் தொடங்கி வைத்தார். இதில் நாடு முழுவதிலுமிருந்து கொள்கை வகுப்பாளர்கள், வன நிர்வாகிகள், அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் திரு கீர்த்திவர்தன் சிங் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் முக்கிய உரையாற்றிய அமைச்சர் திரு யாதவ், சிறு, சிறு குடியிருப்புகள், நிலப் பயன்பாட்டு முறையில் மாற்றம், மனித செயல்பாடுகளின் விரிவாக்கம் போன்றவற்றால் மனிதர்களுக்கும், வனவிலங்குகளுக்கும் இடையேயான மோதல்கள் அதிகரிப்பது, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி சவால்களாக மாறியுள்ளது என்றார். நமது அணுகுமுறை என்பது நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தீர்வு சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, பிரச்சனையை ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.

புலிகள், சிறுத்தைகள், யானைகள் சரணாலயங்களுக்கு வெளியே மனிதர்களுடன் அவற்றுக்கு ஏற்படும் மோதல்களைத் தடுக்க கொள்கை ஒன்றை உருவாக்குவதில் இந்த நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் கூறினார். மனிதர்களுக்கும், வனவிலங்குகளுக்கும் இடையே ஏற்படும் மோதலை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து நகர்ப்பகுதிகளிலும், ஊரகப்பகுதிகளிலும் இயக்க ரீதியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் இணையமைச்சர் திரு கீர்த்திவர்தன் சிங் உரையாற்றுகையில், வனவிலங்குகள் பாதுகாப்பு, சமூகப் பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றுக்கு இடையே சமச்சீரான நிலையை பின்பற்றி நீண்டகால தீர்வுகளை காண்பது அவசியம் என்றார். அலுவலர்களுக்கும், சமூகத்தினருக்கும் திறன் கட்டமைப்பை ஏற்படுத்துவதில் இந்த திறன்சார் மையம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். வனவிலங்கு பாதுகாப்பில் பாரம்பரிய அறிவை பாதுகாத்தல், அமைதியான முறையில் மனிதர்களும், வனவிலங்குகளும் இணக்கமாக இருத்தல் என்பதோடு தரவுகளை ஆவணப்படுத்துவதில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்றைய தொடக்க அமர்வில், நாடு முழுவதும் தரவு நிர்வாகம், அறிவுப்பகிர்வு, மோதலை குறைப்பதற்கான முடிவுகளுக்கு உதவி செய்தல் ஆகியவற்றுக்காக டிஜிட்டல் தளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள தேசிய மனித – வனவிலங்கு மோதல் குறித்த போர்ட்டல் ஒன்றையும் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தொடங்கிவைத்தார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283188&reg=3&lang=1

***

AD/SMB/RJ/KR


(रिलीज़ आईडी: 2283205) आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Kannada