ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இயற்கை சார்ந்த தீர்வுகளில் தூய்மை கங்கை இயக்கம் கவனம் செலுத்துகிறது: இரண்டு முன்னோடித் திட்டங்கள் தொடக்கம்

प्रविष्टि तिथि: 09 JUL 2026 11:48AM by PIB Chennai

நதிகள் புத்துயிரூட்டலுக்கு, வழக்கமான கழிவுநீர் சுத்திகரிப்பு உட்கட்டமைப்பை நீடித்த சூழலியல் அம்சங்களுடன் இணைக்கும் ஒரு விரிவான அணுகுமுறை தேவைப்படுகிறது. கழிவுநீர்க் குழாய் கட்டமைப்புகளும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் மாசுபாட்டைக் குறைப்பதற்கான அடித்தளமாகத் தொடர்ந்தாலும், தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கம் இந்த முயற்சிகளுக்குத் துணைபுரியும் வகையில் இயற்கை சார்ந்த தீர்வுகளை அதிகளவில் ஒருங்கிணைத்து வருகிறது.

 

நதிகளின் தொடர்ச்சியான ஓட்டத்தைப் பராமரிப்பதற்காக சுற்றுச்சூழல் நீரோட்டங்களை உறுதிசெய்யும் நடவடிக்கைகளுடன், சூழலியல் மறுசீரமைப்பை வலுப்படுத்தவும், நதிச் சூழல் மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மீள்திறன் கொண்ட நீர் மேலாண்மை அமைப்புகளை உருவாக்கவும் தூய்மை கங்கை இயக்கம், இயற்கை சார்ந்த தீர்வுகளை ஊக்குவித்து வருகிறது.

 

இந்த விரிவான உத்தியின் ஒரு பகுதியாக, நகர்ப்புற வடிகால்களை அவற்றின் இடத்திலேயே சுத்திகரிப்பதற்காக, செயற்கையாக உருவாக்கப்பட்ட ஈரநிலங்களை அடிப்படையாகக் கொண்ட முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம், நிலையான நதி புத்துயிரூட்டல் திட்டத்தின் வழியாக இயற்கை சார்ந்த தீர்வுகளை முக்கிய நீரோட்டத்தில் கொண்டு வருகிறது.

 

இதன் ஒரு பகுதியாக சுமார் 10 எம்எல்டி ஒருங்கிணைந்த சுத்திகரிப்புத் திறனுடன் யமுனையில் கலக்கும் சாஸ்திரி பார்க் வடிகால், கைலாஷ் நகர் வடிகால் ஆகிய இரண்டு முன்னோடித் திட்டங்கள், நகர்ப்புற வடிகால் மேலாண்மைக்கு நிலையான, ஒரு முக்கியப் பங்கைக் குறிக்கின்றன. இயந்திரக் கட்டமைப்பு, அதிக ஆற்றல் தேவைப்படும் செயல்முறைகளை பெரிதும் சார்ந்திருக்கும் வழக்கமான சுத்திகரிப்பு அமைப்புகளைப் போலல்லாமல், இவை, இயற்கையான ஈரநிலங்களின் சுத்திகரிப்புப் பணிகளைப் பிரதிபலிக்கும் செயற்கை ஈரநில அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டவை.

 

 இயற்கைக்கு எதிராகச் செயல்படாமல் அதனுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், இந்தத் திட்டம் தூய்மையான ஆறுகள், ஆரோக்கியமான நகர்ப்புறச் சூழல் அமைப்புகள், மீள்திறன் மிக்க நீர் மேலாண்மை அமைப்புகளுக்கு அடித்தளமிடுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282711&reg=3&lang=1

(Release ID : 2282711)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2283093) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati