ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜவுளித் தொழில்முனைவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான ஒருங்கிணைந்த வளர்ச்சி மையங்களாக ஐடிஏடிசி-கள் உருவாகும் : மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங்

प्रविष्टि तिथि: 09 JUL 2026 7:36PM by PIB Chennai

தொழில்நுட்ப மேம்பாடு, நிறுவன சீர்திருத்தங்கள், மேம்படுத்தப்பட்ட தொழில் துறை ஆதரவு ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் ஜவுளிச் சூழலமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முன்முயற்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் இன்று (09.07.2026) ஒரு உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், ஜவுளித்துறை அமைச்சகத்தின் செயலாளர் திருமதி நீலம் ஷமி ராவ், ஜவுளித்துறை ஆணையர் திருமதி விருந்தா மனோகர் தேசாய், ஜவுளித்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

முன்னர் விசைத்தறி சேவை மையங்களாக இருந்தவை, ஜவுளித் துறைக்கான ஒருங்கிணைந்த வளர்ச்சி மையங்களாக மறுசீரமைக்கப்பட்டு, ஒருங்கிணைந்த ஜவுளி - ஆடை மேம்பாட்டு மையங்கள் எனப்படும் ஐடிஏடிசி-களாக (ITADCs) மாற்றப்படுவதை அமைச்சர் ஆய்வு செய்தார். இந்த ஐடிஏடிசி-கள், ஜவுளித் தொழில்முனைவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட பிற தரப்பினருக்குத் திறன் மேம்பாடு, சோதனை, வடிவமைப்பு ஆதரவு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், தொழில்முனைவோர் மேம்பாடு, கடன் வசதி, ஏற்றுமதி ஊக்குவிப்பு, சந்தை இணைப்பு ஆகியவற்றை வழங்கும் ஒருங்கிணைந்த மையங்களாகத் திகழும் என்று அமைச்சர் கூறினார்.

 

2026-27-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஐனிஏடிசி-களின் செயல்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர், அவற்றின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைப் பாராட்டினார். இந்தக் காலாண்டில், இந்த மையங்கள் 1,170-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளன என்றும்  நிறுவனக் கடன் வசதியை அதிகரித்துள்ளன எனவும் மின்வணிக இணைப்புகளை வலுப்படுத்தியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். ஐடிஏடிசி-கள், தொடக்க நிலை முதல் சந்தை விரிவாக்கம் வரை ஜவுளி வணிகங்களுக்கு ஆதரவளிக்கக்கூடிய புத்தாக்க, தொழில் மேம்பாட்டு மையங்களாகத் தொடர்ந்து வளர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

 

நிறுவன ஆதரவை வலுப்படுத்துதல், தொழில்நுட்ப மேம்பாட்டைத் துரிதப்படுத்துதல், தொழில்முனைவோரை ஊக்குவித்தல், உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த ஜவுளித் துறையைக் கட்டமைத்தல் ஆகியவற்றுக்கான அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி இக்கூட்டம் நிறைவடைந்தது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283009&reg=3&lang=1

(Release ID: 2283009)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2283064) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी