அணுசக்தி அமைச்சகம்
தேசத்தைக் கட்டமைப்பதில் அறிவியலும் புத்தாக்கமும் முக்கிய அம்சங்களாக உள்ளன: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
09 JUL 2026 6:38PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் அணுசக்தித் திட்டம் ஒரு புதிய வளர்ச்சிக் கட்டத்திற்குள் நுழைந்துள்ளது என்று கூறிய மத்திய அறிவியல் - தொழில்நுட்பம், அணுசக்தித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
புவனேஸ்வரில் உள்ள தேசிய அறிவியல் கல்வி - ஆராய்ச்சி நிறுவனத்தின் (நைசர் NISER) 15-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய அமைச்சர், அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் இந்த நிறுவனத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழா என்பது அறிவியல் மேன்மை, புதுமை, தேசியப் பொறுப்பு ஆகியவற்றின் மரபை புதிய தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் என்று கூறினார்.
குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராக விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார். ஒடிசா ஆளுநர் டாக்டர் ஹரி பாபு கம்பம்பதி, ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி, மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், புகழ்பெற்ற விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களும் இதில் கலந்துகொண்டனர். ஒருங்கிணைந்த எம்.எஸ்.சி., ஒருங்கிணைந்த எம்.எஸ்.சி.-பிஎச்.டி., எம்.எஸ்.சி. மற்றும் பிஎச்.டி. ஆகிய பட்டப்படிப்புகளைச் சேர்ந்த 260 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.
பட்டம் பெறும் மாணவர்களை வாழ்த்திய டாக்டர் ஜிதேந்திர சிங், விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குடியரசுத் துணைத் தலைவருக்குத் தமது நன்றியைத் தெரிவித்தார்.
தேசத்தைக் கட்டமைப்பதில் அறிவியலும் புத்தாக்கமும் முக்கிய அம்சங்களாக உள்ளன என்று அவர் கூறினார். இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தின் சிற்பியான டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபாவின் தொலைநோக்குப் பார்வையை நினைவு கூர்ந்த அமைச்சர், நாட்டின் அணுசக்தித் திட்டம் தொடங்கப்பட்டபோது, இந்தியாவின் அறிவியல் திறன்கள் குறித்து ஐயங்கள் சூழ்ந்திருந்தன என்றார். இந்த ஐயங்கள் இருந்தபோதிலும், இந்தியாவின் அணுசக்தித் திட்டம் அமைதியான நோக்கங்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் என்று டாக்டர் பாபா உறுதியாக அறிவித்தார் என்று அமைச்சர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தை முற்றிலும் ஒரு புதிய நிலைக்குக் கொண்டு சென்று, இந்த தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் சென்றுள்ளார் என்று அமைச்சர் கூறினார். சமீபத்திய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், வாய்ப்புகளை விரிவுபடுத்தி, உள்நாட்டுத் திறன்களை வலுப்படுத்தி, அணுசக்தித் துறையில் பரந்த பங்கேற்புக்குப் புதிய வழிகளைத் திறந்து, இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தியுள்ளன என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282980®=3&lang=1
(Release ID : 2282980)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2283045)
आगंतुक पटल : 15