மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆழ்கடலில் மீன்வளத்தை நிலையான முறையில் பயன்படுத்துவதற்கான அங்கீகாரக் கடிதம் வழங்கும் நிகழ்வை குடியரசு துணைத்தலைவர் தொடங்கி வைத்தார்

प्रविष्टि तिथि: 09 JUL 2026 3:18PM by PIB Chennai

ஆழ்கடலில் மீன்வளத்தை நிலையான முறையில் பயன்படுத்துவதற்கான அங்கீகாரக் கடிதம் வழங்கும் தேசிய அளவிலான நிகழ்விற்கு மத்திய மீன்வளத்துறை ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் 2026 ஜூலை  9 அன்று ஏற்பாடு செய்திருந்தது. இதில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு நடுக்கடலில் மீன்பிடிப்பதற்கான அங்கீகாரக் கடிதம் வழங்கப்படுவதை தொடங்கி வைத்தார். அத்துடன் ஒடிசா ஆழ்கடல் இயக்கம் ஆவணத்தையும் அவர் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், மீன்வளத்துறையின் நீடித்த பொறுப்புமிக்க வளர்ச்சியை மேம்படுத்துவதில் மத்திய மீன்வளத்துறை, ஒடிசா அரசு, ஆகியவற்றின் மீன்வளத்துறை சார்ந்த முயற்சிகளைப் பாராட்டினார். 2025-26-ம் ஆண்டு மத்திய பட்ஜெட் நாட்டின் பிரத்யேக பொருளாதார மண்டலம் மற்றும் ஆழ்கடலில் உள்ள மீன்வள ஆதாரங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவததை அங்கீகரித்துள்ளதாகக் கூறினார். இந்த அங்கீகாரக் கடிதம் மீன்வளத்துறையில் புதிய அத்தியாயத்தைக் குறிப்பதாக அவர் தெரிவித்தார்.  மீனவர்களை மையமாகக் கொண்ட இந்தக் கட்டமைப்பு அதிக மதிப்புடைய கடல் வளங்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி வாழ்வாதாரங்களை வலுப்படுத்தி  கடல் உணவு விநியோக முறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று குறிப்பிட்டார்.

இந்நடவடிக்கைகள் இந்திய கடல் உணவுகள் உலகளாவிய உயர்தர சந்தைகளை அணுகவும், ஏற்றுமதியை மேலும் அதிகரிக்கவும் உதவும் என்று தெரிவித்தார். மீன்வள கூட்டுறவு சங்கங்கள், மீன் விவசாயி உற்பத்தியாளர் ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தினார்.  மீன்வளத்தை நவீன, அறிவியல் சார்ந்த துறையாகவும் சிறந்த வேலைவாய்ப்பு, தொழில்முனைவோர் வாய்ப்புகளை ஏற்படுத்துவதாகவும் இளைஞர்கள் கருத வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் ஊக்குவித்தார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282817&reg=3&lang=1

***

SS/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2283031) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Odia