சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் 46-வது கூட்டம்: மத்திய அமைச்சர் திரு. பூபேந்தர் யாதவ் தலைமையில் கோயம்புத்தூரில் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
09 JUL 2026 4:54PM by PIB Chennai
மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், இன்று (09.07.2026) கோயம்புத்தூரில் நடைபெற்ற மத்திய வன உயிரியல் பூங்கா ஆணையத்தின் 46-வது கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், 2026-27-ம் நிதியாண்டிற்கான மத்திய வன உயிரியல் பூங்கா ஆணையத்தின் முக்கிய சாதனைகள், செயல்பாடுகள் ஆகியவை அடங்கிய அறிக்கை, நிர்வாகக் குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்திய வன உயிரியல் பூங்காக்கள் பாதுகாப்பு, அவற்றை நவீனமயமாக்குதல், புதிய வசதிகளை நிறுவுதல், பார்வையாளர்களுக்கு மேம்பட்ட கல்வி அளித்தல், அறிவியல் திட்டமிடல், உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றுக்கான முன்மொழிவுகளை இக்கூட்டம் ஆய்வு செய்தது.
கூட்டத்தில் நடைபெற்ற முக்கிய விவாதங்கள் பின்வருமாறு:
* உயிரியல் பூங்காக்களின் மேலாண்மை செயல்திறன் மதிப்பீட்டுக் குழுக்களால் மதிப்பிடப்பட்டது.
* தேசிய உயிரியல் பூங்கா நவீனமயமாக்கல் தொடர்பான அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
* இந்திய உயிரியல் பூங்காக்களில் உள்ள கால்நடை மருத்துவர்கள், விலங்கு பராமரிப்பாளர்களுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
* வனவிலங்கு சுகாதார மேலாண்மையில் உருவாகிவரும் சவால்களை எதிர்கொள்ளும் முயற்சியாக, தேசிய வனவிலங்கு சுகாதாரக் கொள்கை முன்மொழியப்பட்டது.
இக்கூட்டத்தில், இந்திய உயிரியல் பூங்காக்களில் பாதுகாப்பு, இனப்பெருக்கம், வனவிலங்கு ஆரோக்கியம், அறிவியல் மேலாண்மை, திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மைல்கற்களை எடுத்துரைக்கும் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் செய்திமடலையும் அமைச்சர் வெளியிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282868®=3&lang=1
(Release ID : 2282868)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2282994)
आगंतुक पटल : 21