சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழுக் கூட்டம் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் கோயம்புத்தூரில் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
09 JUL 2026 2:49PM by PIB Chennai
தேசிய வனவிலங்கு வாரிய நிலைக்குழுவின் 91-வது கூட்டம் கோயம்புத்தூரில் இன்று நடைபெற்றது. மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முக்கிய பாதுகாப்பு முன்முயற்சிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் குறித்தும் பரிசீலிக்கப்பட்டது.
அறிவியல் அடிப்படையிலான வனவிலங்கு பாதுகாப்பு, முக்கிய வனவிலங்குகளின் வாழ்விடங்களை பாதுகாத்தல், சூழலியல் இணைப்பை வலுப்படுத்துதல், நீடித்த வளர்ச்சியை உறுதி செய்தல் ஆகியவற்றில் அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில் தேசிய வனவிலங்கு வாரியம், நிலைக்குழு ஆகியவை தங்களுடைய முந்தைய கூட்டங்களை சிறப்பித்த பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்கள் மீதான முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தன. பிரதமர் தலைமையில், நடைபெற்ற தேசிய வனவிலங்கு வாரியத்தின் 7-வது கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின் முன்னேற்றம் குறித்து குழு ஆய்வு செய்தது. பல்வேறு முக்கிய தேசிய பாதுகாப்பு முன்முயற்சிகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் உரையாற்றிய திரு யாதவ், இந்தியாவின் சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் வனவிலங்கு பாதுகாப்பு முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறினார். வனவிலங்குகள் வாழ்விடங்களுக்குள்ளும் அதைச் சுற்றியும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களின் செயல்பாட்டில் அறிவியல் ரீதியிலான திட்டமிடல், வாழ்விட இணைப்பு ஆகியவை வழிகாட்டியாக அமைய வேண்டும் என்று கூறினார். அத்துடன் தொழில்நுட்பம், சமூகவியல் ஆய்வுகளை உள்ளடக்கியும் வனவிலங்கு பாதுகாப்பில் பாரம்பரிய அறிவை பயன்படுத்தியும் தீர்வுகள் அடிப்படையிலான கொள்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282792®=3&lang=1
***
SS/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2282884)
आगंतुक पटल : 35