மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
உயர்கல்வி குறித்த அகில இந்தியக் கணக்கெடுப்பு அறிக்கைகளை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது
प्रविष्टि तिथि:
08 JUL 2026 5:56PM by PIB Chennai
மத்தியக் கல்வி அமைச்சகம் இன்று 2022-23, 2023-24 ஆகிய ஆண்டுகளுக்கான உயர்கல்வி குறித்த, அகில இந்தியக் கணக்கெடுப்பு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களிடமிருந்து, இணையம் சார்ந்த தரவு சேகரிப்பு முறை மூலம் விரிவான தகவல்களை இந்த கணக்கெடுப்பு மூலம் சேகரிக்கப்படுகிறது. மாணவர்கள் சேர்க்கை, ஆசிரியர்கள், பணியாளர்கள், உள்கட்டமைப்பு வசதிகள், தேர்வு முடிவுகள் உள்ளிட்ட தரவுகளை இந்நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றன. இந்தியாவில் உயர்கல்வி குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் முதன்மை ஆதாரமாக இந்த கணக்கெடுப்பு விளங்குகிறது. மேலும், இத்துறையின் கொள்கை உருவாக்கம், திட்டமிடல், கண்காணிப்பு ஆகியவற்றிற்குத் தேவையான முக்கியத் தகவல்களையும் இது வழங்குகிறது.
இவ்விரு ஆண்டுகளிலும் இந்தக் கணக்கெடுப்பில் உயர்கல்வி நிறுவனங்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கேற்றன. பதிவு செய்யப்பட்ட 60,380 உயர்கல்வி நிறுவனங்களில் 56,180 நிறுவனங்களும், 2023-24-ல் பதிவு செய்யப்பட்ட 64,756 நிறுவனங்களில், 59,533 நிறுவனங்களும் இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்றன. இவ்விரு கணக்கெடுப்புகளிலும் பங்கேற்பு விகிதம் 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282525®=3&lang=1
(Release ID: 2282525)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2282590)
आगंतुक पटल : 15