நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கான தேசிய இளையோர் நாடாளுமன்றப் போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா
प्रविष्टि तिथि:
07 JUL 2026 7:42PM by PIB Chennai
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கான 17-வது தேசிய இளையோர் நாடாளுமன்றப் போட்டி (2024-25)-ன் பரிசளிப்பு விழா நாடாளுமன்ற வளாகத்தின் ஜி.எம்.சி. பாலயோகி அரங்கத்தில் இன்று (07-ஜூலை-2026) நடைபெற்றது.
மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழா, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் தலைமையில் நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் வெற்றி பெற்ற மாணவர் குழுவிற்கு 'அடல் பிஹாரி வாஜ்பாய் சுழலும் நாடாளுமன்றக் கேடயம்', கோப்பையை அமைச்சர் வழங்கினார். இப்போட்டியில் சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்திய ஏழு பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகளுக்கு 'குழு நிலை வெற்றியாளர்' கோப்பைகளும் வழங்கப்பட்டன.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான 17-வது தேசிய இளையோர் நாடாளுமன்றப் போட்டியில் (2024-25), தேசிய அளவில் முதலிடம் பிடித்த ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழக மாணவர்கள், தங்களது 'இளையோர் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நிகழ்வை மீண்டும் ஒருமுறை செய்துக் காட்டினர்.
இந்த விழாவில் உரையாற்றிய அமைச்சர் திரு. அர்ஜுன் ராம் மேக்வால், நாடாளுமன்ற நடைமுறைகளைச் சிறப்பாகச் செய்து காட்டிய மாணவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தார். இத்தகைய இளைஞர்கள் நாட்டின் எதிர்காலமாகவும், தலைவராகவும் திகழ்வார்கள் என்று குறிப்பிட்டார். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் உத்வேகம் அளிக்கக்கூடிய செய்தியை நினைவுகூர்ந்த திரு. மேக்வால், மாணவர்கள் பெரிய அளவில் கனவு காணவும், அவற்றை இலக்குகளாக மாற்றவும், அதனை அடைவதற்குத் தெளிவான திட்டத்துடன் செயல்படவும் வலியுறுத்தினார். மாணவர்கள் நாட்டைக் கட்டமைப்பதில் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், அவர்களின் அனைத்து எதிர்கால முயற்சிகளிலும் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282222®=3&lang=1
(Release ID:2282222)
***
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2282573)
आगंतुक पटल : 9