சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போதைப் பொருள் இல்லா இந்தியா இயக்கம் நாடு முழுவதும் 29.24 கோடிக்கும் மேற்பட்டவர்களை சென்றடைந்துள்ளது

प्रविष्टि तिथि: 08 JUL 2026 3:32PM by PIB Chennai

நாட்டில் போதைப் பொருள் புழக்கத்தைத் தடுப்பதற்கு 2020 ஆகஸ்ட் 15-ல்  போதைப் பொருள் இல்லா இந்தியா இயக்கம் என்ற திட்டத்தை மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் தொடங்கியது. கூட்டு நடவடிக்கைகளின் அவசியத்தை உணர்ந்த அமைச்சகம், தடுப்பு நடவடிக்கைகள், மதிப்பீடு செய்தல், சிகிச்சை, மறுவாழ்வு. சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு, பொதுமக்களுக்கு தகவல் அளித்தல், சமூக விழிப்புணர்வு போன்ற பல்வேறு முயற்சிகளை ஒருங்கிணைக்கிறது.

நாட்டில் போதைப் பொருளுக்கு அடிமையாதல் என்பது நகர்ப்புறம், கிராமப்புறப் பகுதிகளில் உள்ள தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள் ஆகியவற்றை பாதிக்கக் கூடியதாக உள்ளது. இதை எதிர்கொள்ளும் வகையில், போதைப் பொருள் இல்லா இந்தியா இயக்கம், பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய 272 மாவட்டங்களில் தொடங்கப்பட்டு பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டம் 11.15 கோடிக்கும் மேற்பட்ட இளையோர், 7.89 கோடி மகளிர் உட்பட 29.24 கோடிக்கும் மேற்பட்டவர்களை  சென்றடைந்துள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு வீரேந்திர குமார், ஆரோக்கியமான ஒழுக்கமுள்ள இளைஞர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு நாட்டின் கட்டமைப்பின் முன்முயற்சியாக போதைப் பொருள் இல்லா இந்தியா இயக்கம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவை போதைப் பொருள் இல்லா நாடாக மாற்றுவதற்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மாநிலம், மாவட்ட அரசுகள், காவல்துறை, அரசுசாரா நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்ற பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் வகையில்  இத்திட்டம் அமைந்துள்ளதாகக் கூறினார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282425&reg=3&lang=1

***

SS/IR/KPG/SH

 


(रिलीज़ आईडी: 2282569) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Kannada , English , Gujarati , Urdu , हिन्दी