அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

செயற்கைக்கோள் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த, பூமிக்கு அருகில் விண்வெளியில் பொதிந்துள்ள ரகசியங்களை வெளிக்கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 08 JUL 2026 3:30PM by PIB Chennai

பூமிக்கு அருகில் விண்வெளியில் உள்ள கண்டறியப்படாத உண்மைகளைத் துல்லியமாக வெளிக்கொண்டு வருவதற்கான குறிப்பிடத்தக்க முயற்சியில்ஆராய்ச்சியாளர்கள் தரைவிண்வெளி அடிப்படையிலான மதிப்பீடுகளை ஒருங்கிணைத்துஇந்திய விண்வெளிப் பகுதியில் உள்ள மேல்புற அயனோஸ்பியரை முதன்முறையாகப் புனரமைப்பதற்கான புதுமையான செயல்முறையை உருவாக்கியுள்ளனர். இந்த செயல்முறைசெயற்கைக்கோள் செயல்பாடுகள்தகவல் தொடர்பு அமைப்புகள்வழிகாட்டுதல் போன்ற  சேவைகளுக்கு மிகவும் முக்கியதத்துவம் வாந்ததாக இருக்கும்.

அயனோஸ்பியர் என்பது பூமியின் மேல்பரப்பில்,  உள்ள பகுதியாகும். இது வளிமண்டலஅயனோஸ்பியர் மின்னியக்கவியல் செயல்முறைகளில்,முக்கியப் பங்கு  வகிக்கிறது. எலக்ட்ரான் மூலக்கூறு அடர்த்தியில் ஏற்படும் அன்றாட மாறுபாடுபல்வேறு அதிர்வெண் பட்டைகளில்குறிப்பாகஉயர் அதிர்வெண் பட்டையில்வானொலி அலையில் கணிசமான பாதிப்பை உருவாக்குகிறது. இந்தப் பட்டையில்பல்லடுக்கு எதிரொளிப்பு சமிக்ஞைகள்வானலை பரவல் மூலம்நீண்ட தூர வானொலித் தொடர்பை சாத்தியமாக்குகின்றன. இது சமிக்ஞை பரிமாற்றத்தை மாற்றுவதன் மூலம்ஜிபிஎஸ் அல்லது இந்திய நேவிக் அமைப்பு போன்ற செயற்கைக்கோள் அடிப்படையிலான வழிகாட்டுதல் அமைப்புகளையும் பாதிக்கிறது.

எனவேஅயனோஸ்பியரில் உயரத்திற்கு ஏற்ப எலக்ட்ரான் அடர்த்தி எவ்வாறு மாறுபடுகிறது என்பதைப் புரிந்து கொள்வதுநம்பகமான தகவல் தொடர்புவழிகாட்டுதலுக்கு  இன்றியமையாததாக உள்ளது. குறிப்பாகஅயனோஸ்பியர் இயக்கவியல் மிகவும் சிக்கலானதாக இருக்கும் பகுதிகளில்இது மிகவும் அவசியமாகிறது. பெரும்பாலான அடிமட்டத்தில் உள்ள புவி சுற்றுவட்டப்பாதை செயற்கைக்கோள்கள் இந்த உயர வரம்பிற்குள் செயல்படுவதால்அயனோஸ்பியரைத் தொடர்ந்து கண்காணிக்க, 1000 கி.மீ. வரையிலான துல்லிய எலக்ட்ரான் அடர்த்தித் தகவல் அவசியமாகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282424&reg=3&lang=1

 

 

***

SS/SV/SH

 


(रिलीज़ आईडी: 2282567) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी