பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
பழங்குடியின ஆராய்ச்சி நிறுவனங்களை வலுப்படுத்துவது குறித்த இரண்டு நாள் தேசிய பயிலரங்கு புவனேஷ்வரில் நிறைவடைந்தது
இடுகை இடப்பட்ட நாள்:
08 JUL 2026 5:34PM by PIB Chennai
ஒடிசா அரசுடன் இணைந்து பழங்குடியின நல அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த பழங்குடியின ஆராய்ச்சி நிறுவனங்களை வலுப்படுத்துவது குறித்த இரண்டு நாள் தேசிய பயிலரங்கு புவனேஷ்வர் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் இன்று நிறைவடைந்தது.
இப்பயிலரங்கம் நாட்டின் பழங்குடியினர் ஆராய்ச்சி சூழலின் எதிர்காலம் குறித்து விவாதிப்பதற்காக பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனங்கள், மாநில பழங்குடியினர் நலத்துறைகள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்நுட்ப அமைப்புகள், தொழில்துறை ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 200 பேரை ஒன்றிணைத்தது.
இப்பிரகடனம் நாட்டின் வளமான பழங்குடியின பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு சான்றுகள் அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்திற்கும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்குப் பங்களிக்கும் வகையிலும் ஒரு கூட்டு முயற்சியான எதிர்காலத்திற்கு தயாரான ஆராய்ச்சி சூழலைக் கட்டமைப்பது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282509®=3&lang=1
****
TV/IR/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2282558)
வருகையாளர் எண்ணிக்கை : 49