மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
எல்லைக்கு அப்பால், நடுக்கடலில், மீன்பிடிப்பதற்கான அங்கீகாரக் கடிதம் புவனேஷ்வரில் வழங்கப்படுகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
08 JUL 2026 7:50AM by PIB Chennai
ஒடிசாவின் புவனேஷ்வரில் 2026 ஜூலை 9 அன்று நாட்டின் எல்லைக்கு அப்பால் அமைந்துள்ள நடுக்கடலில், நீடித்த முறையில் மீன்பிடிப்பதற்கான அங்கீகாரக் கடிதத்தை வெளியிடும் தேசிய அளவிலான நிகழ்ச்சிக்கு மத்திய மீன்வளத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு நடுக்கடலில் நீடித்த முறையில் மீன்பிடிப்பதற்கான அங்கீகார கடிதத்தை வழங்குகிறார். அத்துடன் ஒடிசா ஆழ்கடல் இயக்க ஆவணத்தையும் அவர் வெளியிட உள்ளார்.
இந்நிகழ்ச்சியில், ஒடிசா ஆளுநர் டாக்டர் ஹரிபாபு கம்பம்பட்டி, ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி, மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், பெண் மீன் விவசாயிகள், மீனவர்கள் உட்பட சுமார் 1,000 மீன் விவசாயிகளும், மீனவர்களும் பங்கேற்கின்றனர்.
அங்கீகாரக் கடிதம் என்பது இந்திய மீன்பிடி கப்பல்கள் மூலம் ஆழ்கடலில் மீன்பிடித்தொழிலில் நீடித்த முறையில் ஈடுபடுவதற்கான வழிகாட்டுதல்கள் 2025-ன் கீழ் உள்ள ஒரு கட்டாய வழிமுறையாகும். ஆழ்கடலில் மீன்பிடித்தல் அல்லது மீன்பிடித்தல் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்தியக் கப்பல்களுக்கு ஒரு வெளிப்படையான பொறுப்புடமையானதாக இந்த அங்கீகாரக் கடிதம் உள்ளது.
இந்த முன்முயற்சி மீன் விவசாயிகள் உற்பத்தி அமைப்புகள், மீன்வளர்ப்பு கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்தும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282312®=3&lang=1
***
SS/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2282500)
வருகையாளர் எண்ணிக்கை : 57