வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தோல், காலணித் துறையின் ஏற்றுமதி இலக்கை 15 பில்லியன் டாலராக உயர்த்த மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் அழைப்பு விடுத்துள்ளார்

प्रविष्टि तिथि: 06 JUL 2026 9:40PM by PIB Chennai

தோல், காலணித் துறையின் ஏற்றுமதி இலக்கை அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் குறைந்தபட்சம் 15 பில்லியன் டாலராக உயர்த்துமாறு மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல்  தொழில்துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற ஏற்றுமதியில் சிறந்து விளங்குபவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழாவில் அவர் உரையாற்றினார்.  புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களைப் பயன்படுத்தி, ஏற்றுமதி சந்தைகளைப் பன்முகப்படுத்துவதன் மூலம் இந்தத் துறையில் மூன்று மடங்கு வளர்ச்சி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். இங்கிலாந்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரும் ஜூலை 15 முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தத்திற்கான இறுதிகட்டப் பணிகள் அடுத்த 15-20 நாட்களில் நிறைவடையும் என்று அவர் தெரிவித்தார்.  தற்போது 40 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இத்துறை, எதிர்காலத்தில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் திறன் கொண்டதாக விரிவடையும் என்று தெரிவித்த அவர், நவீன வடிவமைப்பு, தரமான பேக்கேஜிங் ஆகியவற்றை மேம்படுத்த தேசிய வடிவமைப்பு நிறுவனம், இந்திய பேக்கேஜிங் நிறுவனம் போன்ற முன்னணி அமைப்புகளுடன் இணைந்து செயல்படுமாறு தொழில் துறையினரை கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281849&reg=3&lang=1

***

SS/PD/KR

 


(रिलीज़ आईडी: 2282367) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati