புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
2024-25-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்ட சேவை உற்பத்தி குறியீடு தொகுப்பு குறித்த தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் அறிக்கை
प्रविष्टि तिथि:
07 JUL 2026 4:00PM by PIB Chennai
நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் பாதிக்கும் மேற்பட்ட பங்களிப்பை வழங்கும் சேவைத் துறையின் அளவீட்டை மேம்படுத்துவதிலும், இந்தியாவின் புள்ளியியல் அமைப்புமுறையை வலுப்படுத்துவதிலும் முன்மொழியப்பட்ட சேவை உற்பத்திக் குறியீடு (ISP) ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. இந்தக் குறியீடு, தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் (ஐஐபி) ஒரு துணை அமைப்பாகச் செயல்படுவதுடன், இந்தியாவின் முறைசார் பொருளாதாரத் துறையில் ஏற்படும் குறுகிய கால மாற்றங்கள் குறித்த விரிவான மாதாந்திர அளவீட்டையும் முதன்முறையாக வழங்கும்.
ஐஎஸ்பி-ன் உருவாக்கத்தை வழிநடத்துவதற்காக, நிதி ஆயோக்கின் சிறப்பு ஆய்வாளர் திருமதி தேப்ஜானி கோஷ் தலைமையில், சேவை உற்பத்தி குறியீட்டிற்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவை (TAC-ISP) மே 2025-இல் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அமைத்தது. இந்தக் குழுவில் கல்வி மற்றும் தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மட்டுமின்றி, சேவைத் துறை சார்ந்த அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர்.
விரிவான ஆலோசனைகள் மற்றும் விவாதங்களுக்குப் பிறகு, குழுவின் இன் அறிக்கை இப்போது இறுதி செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரத்தின் முறைசார் துறைக்கான மாதாந்திர ஐஎஸ்பி-ஐத் தொகுப்பதற்கான ஒரு விரிவான கட்டமைப்பை இது வழங்குகிறது.
இந்த அறிக்கை, துறைசார் உள்ளடக்கம், பொருத்தமான தரவு ஆதாரங்களைக் கண்டறிதல், விலை குறைப்பான்களைத் தேர்ந்தெடுத்தல், எடையிடல் கட்டமைப்பு, குறியீட்டுத் தொகுப்பு முறை மற்றும் பரவல் கட்டமைப்பு உள்ளிட்ட ஐஎஸ்பி தொகுப்பின் பல்வேறு கருத்தியல் மற்றும் வழிமுறை அம்சங்கள் குறித்த குழுவின் ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் முன்வைக்கிறது. இது 2024–25-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்ட லாஸ்பியர்ஸ் அளவு குறியீட்டையும், 2-இலக்க என்ஐசி 2025 நிலையில் தொகுப்பதையும், மொத்த மதிப்பு கூட்டல் (ஜிவிஏ) எடைகளைப் பயன்படுத்தி ஒருங்கிணைப்பதையும் பரிந்துரைக்கிறது.
2026 ஜூலை 14 அன்று ஐஎஸ்பி தொடர் வெளியிடப்படுவதற்கு (சோதனை முயற்சி) முன்னதாக, முன்மொழியப்பட்ட ஐஎஸ்பி கட்டமைப்பை பயனர்கள் நன்கு புரிந்துகொண்டு உள்வாங்கிக்கொள்ள உதவும் நோக்கிலேயே இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282014®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2282258)
आगंतुक पटल : 12