பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொச்சியில் தற்சார்பு பஞ்சாயத்து திட்டம் குறித்த பயிலரங்கு நடைபெற்றது

प्रविष्टि तिथि: 07 JUL 2026 4:37PM by PIB Chennai

கேரள மாநிலம் கொச்சியில் தற்சார்பு பஞ்சாயத்து திட்டம் குறித்த 3-வது பயிலரங்கிற்கு கேரள அரசின் உள்ளாட்சித் துறையுடன் இணைந்து மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.

இப்பயிலரங்கில் உரையாற்றிய செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், தற்சார்பு பஞ்சாயத்து திட்டம் என்பது பஞ்சாயத்துகளின் சொந்த வருவாய் ஆதாரத்தை அதிகரிப்பது, நீடித்த நிதி நிர்வாகத்தை ஊக்குவிப்பது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான உள்ளூர்  வாய்ப்புகளை பயன்படுத்த உதவுவது ஆகியவற்றின் மூலம் அவற்றை வலுப்படுத்தும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முன்முயற்சி என்று கூறினார்.

சமூகங்களை திரட்டுவதிலும், புதுமைக்கண்டுபிடிப்புகளை வளர்ப்பதிலும் பஞ்சாயத்துகள் முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் தெரிவித்தார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நிலையை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தும் வகையில், நிதி ரீதியாக வலுவூட்டப்பட்ட மீள்திறன் கொண்ட எதிர்காலத்திற்கேற்ற பஞ்சாயத்துக்களைக் கட்டமைக்க தொலைநோக்குப் பார்வை அணுகுமுறையைக் கடைபிடிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282047&reg=3&lang=1

****

TV/IR/KPG/SH

 


(रिलीज़ आईडी: 2282173) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Malayalam