PIB Backgrounder
azadi ka amrit mahotsav

கூட்டுறவின் மூலம் வளர்ச்சி

प्रविष्टि तिथि: 06 JUL 2026 2:30PM by PIB Chennai

உலகம் ஒரே குடும்பம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இந்திய கூட்டுறவு இயக்கம் கிராமப்புறங்களில் கடன் வசதிபால் வளம்மீன்வளம்வீட்டுவசதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறதுகூட்டுறவுத் துறையின் ஆற்றலை வெளிக்கொண்டு வரும் நோக்கில் 2021 ஜூலை அன்று மத்திய கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கப்பட்டதுஇந்த அமைச்சகத்தின் ஐந்தாவது ஆண்டு நிறுவன தினம் புதுதில்லி பாரத் மண்டபத்தில் இன்று கொண்டாடப்பட்டதுஇந்நிகழ்வில் கூட்டுறவு அமைப்புகளை நவீனமயமாக்கும் வகையில் 50,000 தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள் மின்னணுமயமாக்கப்பட்ட இ-சங்கங்களாக மாற்றப்பட்டதோடு, 47 தானியக் கிடங்குகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதுமேலும்பால் கொள்முதல் தளம்நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான முக்கிய வங்கித் தீர்வு தளம் (சிபிஎஸ்)செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வாடிக்கையாளர் சேவை தளம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.

கிராமப்புற இந்தியாவின் 98 சதவீதப் பகுதிகளை உள்ளடக்கி 8.5 லட்சத்திற்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களும், செயல்பாட்டில் உள்ள 6.6 லட்சம் சங்கங்களும் 32 கோடி உறுப்பினர்களுக்கு தற்போது சேவைகளை வழங்கி வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் கூட்டுறவுக் கட்டமைப்பை உள்ளடக்கியதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்ற 152 முக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிராமப்புற பொருளாதாரத்தின் ஆரம்பப் புள்ளியாக விளங்கும் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் இப்போது கடன் வழங்குவதோடு மட்டுமின்றி சில்லறை வர்த்தகம், மருந்தகங்கள், பொதுச் சேவை மையங்கள் போன்ற 25 வகையான வணிக நடவடிக்கைகளில் ஈடுபட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சங்கங்களை கணினிமயமாக்கும் திட்டத்திற்காக 2,925.39 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்த கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் உலகின் மிகப்பெரிய பரவலாக்கப்பட்ட தானியக் கிடங்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் 145 சங்கங்களில் கிடங்குகள் கட்டப்பட்டு 68,702 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான சேமிப்புத் திறன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவுத் துறையில் 1,863 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் உருவாக்கப்பட்டு சந்தை இணைப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கூட்டுறவுச் சங்கங்களின் நிதி நிலையை மேம்படுத்த குறைந்தபட்ச மாற்று வரி 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டதோடு, ரொக்கப் பணம் எடுப்பதற்கான டிடிஎஸ் வரம்பு 3 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பால் கொள்முதலை 50 சதவீதம் அதிகரிக்கும் நோக்கில் வெண்மைப் புரட்சி 2.0 தொடங்கப்பட்டு 25,282 பால் கூட்டுறவுச் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கூட்டுறவுத் துறையின் வளர்ச்சிக்காக தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் (என்சிஇஎல்), தேசிய கூட்டுறவு இயற்கை தயாரிப்புகள் நிறுவனம், பாரதிய கூட்டுறவு விதை சங்கம் ஆகிய மூன்று புதிய தேசிய கூட்டுறவு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு ஏற்றுமதி, தரச் சான்றிதழ், தரமான விதைகள் விநியோகம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கூட்டுறவுத் துறை சார் கல்விக்காக நாட்டின் முதல் கூட்டுறவுப் பல்கலைக்கழகமாக திரிபுவன் கூட்டுறவுப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர்களைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்த பாரத் டாக்ஸி என்ற கூட்டுறவு அடிப்படையிலான வாகன இயக்கம் தொடங்கப்பட்டு தில்லி, குஜராத், மும்பை உள்ளிட்ட நகரங்களில் பதிவு செய்யப்பட்ட 6.37 லட்சம் ஓட்டுநர்கள், 35.77 வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. கூட்டுறவு மூலம் வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வையின் கீழ் இந்த இயக்கம் தற்சார்பு இந்தியாவை உருவாக்கத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281581&reg=3&lang=1

***

SS/PD/SH


(रिलीज़ आईडी: 2281800) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Gujarati , English , Urdu