புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எரிசக்திப் புள்ளிவிவரங்கள் மீதான நிபுணர் குழுவின் அறிக்கை

प्रविष्टि तिथि: 06 JUL 2026 2:34PM by PIB Chennai

மத்திய புள்ளிவிவரங்கள்திட்ட அமலாக்க அமைச்சகம்எரிசக்திப் புள்ளிவிவரங்கள் மீதான நிபுணர் குழுவின் அறிக்கையை வெளியிடுகிறது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதிலும்சமூக மேம்பாட்டிற்கு ஆதரவளிப்பதிலும் எரிசக்தி முக்கியப் பங்கு வகிக்கிறது. மத்திய புள்ளிவிவரங்கள்திட்ட அமலாக்க அமைச்சகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வரும் இந்திய எரிசக்திப்  புள்ளிவிவர அறிக்கைகள்சர்வதேச தரநிலைகள்வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றிபல்வேறு அட்டவணைகள்வரைபடங்கள்நீடித்த எரிசக்தி ஆகியவற்றின் குறியீடுகளைக் கொண்டுதேசிய அளவில் எரிசக்தி விநியோகம் குறித்து எடுத்துரைக்கிறது. இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகள்நிகர பூஜ்ஜிய கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான இலக்குகளை நோக்கி முன்னேறி வரும் நிலையில்ஆதார அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்திற்கு ஆதரவளிப்பதற்கும்எரிசக்தி  மாற்றத்தை திறம்படக் கண்காணிப்பதற்கு ஏதுவாக அதற்கான நடைமுறைகளை எளிதாக்குவதற்கும்,  உதவிடுகிறதுவலுவானவிரிவானஒருங்கிணைக்கப்பட்ட எரிசக்தி புள்ளிவிவரக் கட்டமைப்பின் அதிகரித்து வரும் தேவை அடிப்படையிலும்  இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தத் தேவையை கருத்தில் கொண்டுஐஐடி-தில்லி கல்வி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ரங்கன் பானர்ஜி தலைமையில்எரிசக்தி தொடர்பான புள்ளி விவரங்களுக்கான ஒரு நிபுணர் குழுவை மத்திய புள்ளியியல்திட்ட அமலாக்க அமைச்சகம் அமைத்துள்ளது. இக்குழுவில்எரிசக்தி அமைச்சகங்களின் மூத்த பிரதிநிதிகளும்எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனம்திறன் வாய்ந்த எரிசக்தி பொருளாதார வளர்ச்சிக்கான கூட்டணி போன்ற ஆராய்ச்சி நிறுவனங்களின் துறைசார் நிபுணர்களும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்திய எரிசக்திப் புள்ளிவிவரங்கள்” வெளியீடுஇந்திய எரிசக்தி புள்ளிவிவரத் தரவுத்தளம் ஆகியவற்றின் உள்ளடக்கம்வரையறைகள்வகைப்படுத்தல் அமைப்புகள்தரவு ஆதாரங்கள்மதிப்பீட்டு வழிமுறைகள் உள்ளிட்ட அம்சங்களை இக்குழு முழுமையாக ஆய்வு செய்தது. எரிசக்தி புள்ளிவிவரங்களுக்கான சர்வதேச தரநிலைகளைப் பூர்த்தி செய்தல்முக்கிய தரவு இடைவெளிகளைக் களைதல்பல்வேறு எரிசக்தி அமைச்சகங்களின் இந்திய எரிசக்தி புள்ளிவிவரத் தரவுத்தளத்தில் உள்ள முரண்பாடுகளைச் சரிசெய்தல் போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281596&reg=3&lang=1

***

SS/SV/SH


(रिलीज़ आईडी: 2281791) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada