உரங்கள் துறை
azadi ka amrit mahotsav

இந்தியாவின் உர கையிருப்பு உயரும் - தேவைக்கேற்ப மாநிலங்களுக்குத் தொடர்ந்து உரங்கள் வழங்கப்படும்: மத்திய அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா

प्रविष्टि तिथि: 05 JUL 2026 6:50PM by PIB Chennai

இந்தியாவுக்கான உரங்கள், உர மூலப்பொருட்களை ஏற்றி வந்த மொத்தம் 15 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாகக் கடந்துள்ளன எனவும் இந்தக் கப்பல்கள் வந்து சேர்வதன் மூலம், நாட்டின் உர இருப்பை கணிசமாக அதிகரிக்கும் என்றும் மத்திய ரசாயனம், உரங்கள் துறை அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், மேற்கு ஆசியாவில் தொடங்கிய மோதல், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளைக் கடுமையாகப் பாதித்தது என்றார். உரங்களின் விலை கடுமையாக உயர்ந்ததுடன், சரக்குகள் வந்து சேரும் நேரமும் கணிசமாக அதிகரித்தது என்று அவர் கூறினார். இந்த உலகளாவிய நெருக்கடியால் இந்தியாவும் பாதிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் திறமையான தலைமையின் கீழ், மத்திய அரசு ஆரம்பத்திலிருந்தே விழிப்புடனும் முழுமையாகத் தயாராகவும் இருந்தது என்று அமைச்சர் கூறினார். மாற்று வழிகள் மூலம் உரங்களை இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன எனவும் இதன் விளைவாக, இன்று நமது உர இறக்குமதி, உள்நாட்டு உற்பத்தி ஆகிய இரண்டும் மிகவும் வலுவான நிலையில் உள்ளன என்றும் அவர் கூறினார்.

பிராந்திய அளவில் உரங்கள் கிடைப்பதையும், வெளிப்படையான விநியோகத்தையும் உறுதி செய்வதற்காக, உரத்துறை மாநில அரசுகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். சர்வதேச சந்தைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் நமது விவசாயிகளைப் பாதிக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.  நமது விவசாயிகளின் நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை நமது அரசு உறுதி செய்துள்ளது என்று அவர் கூறினார். உலகளாவிய உர விலைகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்வு ஏற்பட்ட போதிலும், மத்திய அரசு விவசாயிகளின் நலனைத் தனது மிக உயர்ந்த முன்னுரிமையாகக் கொண்டுள்ளது என்று அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281352&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2281363) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Gujarati