ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊரக வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக, ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் குழு கர்நாடகா பயணம்

प्रविष्टि तिथि: 05 JUL 2026 4:52PM by PIB Chennai

முதன்மை ஊரக வளர்ச்சித் திட்டங்களின் செயலாக்கத்தை வலுப்படுத்துவதற்காக ஊரக வளர்ச்சி அமைச்சகம் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஊரக வளர்ச்சித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் குழு ஒன்று, இன்று முதல் (2026 ஜூலை 5) வரும் 11-ம் தேதி வரை கர்நாடகாவிற்குப் பயணம் மேற்கொள்கிளது. இந்தக் குழுவில், ஊரக வளர்ச்சித் துறையின் துணை தலைமை இயக்குநரும் புள்ளியியல் ஆலோசகருமான திரு அல்தா ஹுசைன் ஹாஜி, துணைச் செயலாளர் திரு. அனில் குமார், உதவி இயக்குநர் திரு பல்தேவ் வர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஊரக வளர்ச்சித் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்துவதற்காக, கர்நாடக அரசுக்கு வழிகாட்டுதல், கண்காணிப்பு, செயலாக்க ஆதரவை வழங்குவதே இந்தப் பயணத்தின் நோக்கமாகும். இந்தப் பயணத்தின் போது, அதிகாரிகள் பெங்களூருவில் உள்ள மாநில அரசு அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, முக்கியத் திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வார்கள். மேலும், திட்டச் செயலாக்கம், சேவை வழங்குதல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிப்பார்கள்.

விபி-ஜி - ராம் -ஜி எனப்படும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கத்தின் கள அளவிலான செயலாக்கத்தை ஆய்வு செய்ய இந்தக் குழு பெலகாவி, தாவணகெரே மாவட்டங்களுக்கும் செல்லும். அதிகாரிகள், மாவட்ட நிர்வாகங்களின் தயார்நிலையை மதிப்பிட்டு, செயலாக்கத்தில் உள்ள சவால்களைக் கண்டறிந்து, இத்திட்டத்தின் திறமையான செயலாக்கத்தை உறுதி செய்ய உதவுவார்கள்.

பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம், தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம், பிரதமரின் கிராம சாலைகள் திட்டம், தேசிய சமூக உதவித் திட்டம் உள்ளிட்ட ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் மற்ற முதன்மைத் திட்டங்களின் செயலாக்கத்தையும் அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281314&reg=48&lang=1

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2281344) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Kannada