சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய மின்-ஆளுகை விருது - ஐசிஎம்ஆர் தங்கப் பதக்கம் வென்றது

प्रविष्टि तिथि: 05 JUL 2026 12:43PM by PIB Chennai

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ICMR) முதன்மை முன்முயற்சியான, தேசிய சுகாதார ஆராய்ச்சி முன்னுரிமைத் திட்டம் எனப்படும் ஐசிஎம்ஆர் - மைண்ட்ஸ் (ICMR-MINDS) பணியாளர், நிர்வாக சீர்திருத்தங்கள் துறையின் சார்பில் வழங்கப்படும் விருதுகளில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.  மின்-ஆளுகைக்கான இந்த தேசிய விருதுகளில், 'மக்களை மையமாகக் கொண்ட சேவைகளை வழங்குவதற்காக செயற்கை நுண்ணறிவையும் பிற நவீன கால தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துவதன் மூலம் புதுமை படைத்தல்' என்ற பிரிவு 2-ன் கீழ் ஐசிஎம்ஆர் தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளது.

இந்த விருதை, மத்திய பணியாளர் நலன், பொது மக்கள் குறை தீர்ப்பு, நிர்வாக சீர்திருத்தங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஐசிஎம்ஆர்-க்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ராஜஸ்தான் அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் ரத்தோர், ராஜஸ்தான் அரசின் தலைமைச் செயலாளர் திரு வி. சீனிவாஸ், மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் துறை செயலாளர் திருமதி நிவேதிதா சுக்லா வர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விருது, 2026 ஜூலை 1, 2 தேதிகளில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்ற 29-வது தேசிய மின்-ஆளுகை மாநாட்டின் போது வழங்கப்பட்டது.

ஐசிஎம்ஆர்-மைண்ட்ஸ் என்பது, மனநல, போதைப்பொருள் பயன்பாட்டுக் கோளாறுகளைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல் ஆகியவை குறித்த ஒரு செயலாக்க ஆராய்ச்சித் திட்டமாகும்.

இந்த அங்கீகாரம் குறித்துப் பேசிய, ஐசிஎம்ஆர்-ன் தலைமை இயக்குநர் டாக்டர் ராஜீவ் பஹல், சிக்கலான பொது சுகாதார சவால்களைத் தீர்ப்பதற்காக, தரவு சார்ந்த தொழில்நுட்பத் தலையீடுகளில் ஐசிஎம்ஆர் தொடர்ந்து முன்னோடியாகச் செயல்படுகிறது என்றார்.  மக்களுக்கு மலிவு விலையில், தரப்படுத்தப்பட்ட, உயர்தரமான சுகாதாரப் பராமரிப்புத் தளங்களை வழங்குவதில் ஐசிஎம்ஆர் உறுதியாக உள்ளது, என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281222&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2281333) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी