PIB Backgrounder
azadi ka amrit mahotsav

மை பாரத் – டிஜிட்டல் இந்தியாவும் இளம் இந்தியாவும் சந்திக்கும் இடம்

இடுகை இடப்பட்ட நாள்: 05 JUL 2026 10:59AM by PIB Chennai

உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 65% பேர் 35 வயதுக்குக் குறைவானவர்கள். இந்த இளைஞர் மக்கள்தொகையின் மகத்தான ஆற்றலை உணர்ந்து, இளைஞர் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் 'மை பாரத்' திட்டமும் அதற்கான தளமும் அக்டோபர் 2023- ல் தொடங்கப்பட்டது . தன்னார்வத் தொண்டு, திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மக்கள் பங்கேற்பு ஆகியவற்றுக்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், தேசத்தைக் கட்டமைப்பதில் இளைஞர்களை மையமாக வைப்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

மை பாரத் என்பது, அர்த்தமுள்ள இளைஞர் ஈடுபாட்டை உருவாக்குவதற்காக அரசு, கல்வி நிறுவனங்கள், இலாப நோக்கற்ற அமைப்புகள், தொழில்துறை ஆகியவற்றை இணைக்கும் ஒரு டிஜிட்டல் தளமாகச் செயல்படுகிறது. பரந்த டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் கீழ் இந்தியாவின் வலுவான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பால் செயல்படுத்தப்படும் இந்தத் தளம், லட்சக்கணக்கான இளம் இந்தியர்களைக் கற்றல், தேசத்தைக் கட்டியெழுப்பும் வாய்ப்புகள் ஆகியவற்றுடன் தடையின்றி இணைத்து, நாடு முழுவதும் அதிக உள்ளடக்கம், அணுகல், பங்கேற்பு ஆகியவற்றை உறுதி செய்கிறது.

மை பாரத், நேரடி ஈடுபாட்டை டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணைத்து ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமாகச் செயல்படுகிறது.

இந்த தளம் மூலம் அணுகக்கூடிய வாய்ப்புகள்:                

* டிஜிட்டல் தன்னார்வத் தொண்டு

* வகுப்பறைகளுக்கு அப்பாற்பட்ட அனுபவக் கற்றல்

* தலைமைத்துவ மேம்பாடும் தொழில் ஆதரவும்         

தேசிய இளைஞர் விழா : வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் கலந்துரையாடல் 2026-ல் 50.42 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். இது இந்தியாவின் மிகப்பெரிய இளைஞர் கலந்தாய்வுப் பயிற்சிகளில் ஒன்றாக அமைந்தது.

மை பாரத் அமைப்பு, மக்கள் பங்கேற்பையும், அர்ப்பணிப்பையும் வலுப்படுத்தும் நோக்கில், நாடு தழுவிய பாதயாத்திரைகள், தூய்மை இயக்கங்கள், சமூக சேவை நடவடிக்கைகளை ஏற்பாடு செய்கிறது.

 நாடு முழுவதும் இளைஞர்களின் பங்கேற்பை தொழில்நுட்பம் எவ்வாறு எளிதில் அணுகக்கூடியதாகவும், அங்கீகரிக்கப்பட்டதாகவும், எதிர்காலத்திற்குத் தயாரானதாகவும் ஆக்குகிறது என்பதை மை பாரத் தளம் எடுத்துக்காட்டுகிறது.

மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281200&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2281324) வருகையாளர் எண்ணிக்கை : 70
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Manipuri , Gujarati