வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பவ்யா திட்டத்தை மாநிலங்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவும், ஏற்றுமதிக்கு அதிகபட்ச முன்னுரிமை அளிக்கவும் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் வேண்டுகோள்

प्रविष्टि तिथि: 03 JUL 2026 9:11PM by PIB Chennai

இந்தியாவின் ஏற்றுமதிப் போட்டித்தன்மையை வலுப்படுத்த ஒருங்கிணைந்த தேசிய முயற்சி தேவை என்று வலியுறுத்திய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், பவ்யா தொழிற்பூங்காத் திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறும், ஏற்றுமதிக்கு மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்குமாறும் மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டார். புதுதில்லியில் நடைபெற்ற வர்த்தக வாரியக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக மாநில அரசுகள், ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்புகள் (EPC), தொழில் சங்கங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பின்பற்ற வேண்டிய ஏழு அம்சங்களைக் கொண்ட செயல் திட்டத்தை முன்வைத்தார்.

வர்த்தகத் துறையின் உயர்மட்ட ஆலோசனை அமைப்பான வர்த்தக வாரியக் கூட்டம், திரு பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்றது. இதில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா, வர்த்தக வாரியத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள், ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்புகள், முன்னணி தொழில் சங்கங்கள் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வரிகள் தொடர்பான மாற்றங்கள், சரக்குக் போக்குவரத்து இடையூறுகள் மற்றும் உலகளாவிய தேவை குறைவு ஆகிய சவால்கள் இருந்தபோதிலும், 4.6% வளர்ச்சியைப் பதிவு செய்து, 863 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற இதுவரை இல்லாத அளவிலான ஏற்றுமதியுடன் இந்தியா 2025-26 நிதியாண்டை நிறைவு செய்துள்ளதாக திரு கோயல் குறிப்பிட்டார். இதில் சரக்கு ஏற்றுமதி சுமார் 442 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் உறுதியான நிலையைத் தக்கவைத்துக் கொண்ட அதே வேளையில், சேவை ஏற்றுமதி 421 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேலாக உயர்ந்து சாதனை அளவை எட்டியது.

2025-26 நிதியாண்டில் இந்தியாவின் சாதனை அளவிலான ஏற்றுமதிச் செயல்பாட்டைக் குறிப்பிட்ட அமைச்சர், சுங்கவரி மாற்றங்கள், சரக்குப் போக்குவரத்து இடையூறுகள் மற்றும் மந்தமான தேவை உள்ளிட்ட குறிப்பிடத்தக்க உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இந்தச் சாதனை எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்திய ஏற்றுமதியாளர்களின் மன உறுதி, சந்தைப் பரவலாக்கம் மற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட உருமாற்றத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தங்கள் ஆகியவை இந்தச் சிறப்பான செயல்பாட்டிற்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280927&reg=3&lang=1

***

TV/RB/RJ


(रिलीज़ आईडी: 2281243) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati