வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பொம்மை உற்பத்தித் தொழிற்சாலைத் தொகுப்புப் பகுதிகளில் நவீன சோதனை வசதிகள் அமைக்கப்படும் - மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

प्रविष्टि तिथि: 04 JUL 2026 1:52PM by PIB Chennai

புதுதில்லியில் இந்திய பொம்மை உற்பத்தியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச கண்காட்சியில்/மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல்  இன்று (04.07.2026) உரையாற்றினார். அரசின் தொடர்ச்சியான ஆதரவால் இந்திய பொம்மைத் தொழில் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அவர் எடுத்துரைத்தார்.

இந்தியத் தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்), தேசிய சோதனை மையம், பிற அரசு ஆய்வகங்கள் மூலம், நாடு முழுவதும் உள்ள பொம்மை உற்பத்தித் தொழற்சாலைத் தொகுப்புப் பகுதிகளில் நவீன சோதனை வசதிகளை அரசு நிறுவும் என்று அமைச்சர் உறுதியளித்தார். உள்நாட்டு, சர்வதேச நுகர்வோருக்காக இந்தியப் பொம்மைகள் மிக உயர்ந்த தரத்தைப் பூர்த்தி செய்வதை உறுதிசெய்யத் தேவையான சோதனை உபகரணங்களைக் கண்டறிந்து, அவற்றின் பயன்பாட்டை ஊக்குவிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு குறு நிறுவனமும் சிறு நிறுவனமாக மாறவும், ஒவ்வொரு சிறு நிறுவனமும் நடுத்தர நிறுவனமாக மாறவும், ஒவ்வொரு நடுத்தர நிறுவனமும் பெரிய நிறுவனமாக மாறவும் இலக்கு கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கூறினார். குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளைத் தொடர்ந்து விரிவுபடுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

திறன் மேம்பாட்டு மையங்களை நிறுவுமாறும், தொழிற்பயிற்சி நிறுவனங்களுடன், இணைந்து மேம்பட்ட உற்பத்தி முறைகள் குறித்துத் தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிக்குமாறு பொம்மை தொழில் துறையினருக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

தரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு பியூஷ் கோயல், உயர் தரநிலைகளைப் பேணுவது, சுமார் 120 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள உலகளாவிய பொம்மை சந்தையில் இந்தியாவின் இருப்பை கணிசமாக விரிவுபடுத்தும் என்று கூறினார்.

இந்திய பொம்மை உற்பத்தியாளர் சங்கத்தில், தற்போது சுமார் 1,200 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், நாடு முழுவதும் கிட்டத்தட்ட 21,000 பொம்மை உற்பத்தியாளர்கள் இயங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். அனைத்து உற்பத்தியாளர்களையும் பொதுவான தளத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று அவர் இந்த சங்கத்தை திரு பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.

இந்தக் கண்காட்சி, 400-க்கும் மேற்பட்ட இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொம்மை பிராண்டுகளையும், 15,000-க்கும் மேற்பட்ட வணிகப் பார்வையாளர்களையும், 50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களையும், பொம்மை உற்பத்திச் சூழலமைப்பைச் சேர்ந்தவர்களையும் ஒருங்கிணைத்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281005&reg=48&lang=1

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2281093) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati