பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சுவாமி விவேகானந்தரின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்

प्रविष्टि तिथि: 04 JUL 2026 1:49PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (04.07.2026) சுவாமி விவேகானந்தரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம், ஆன்மீக மரபுகள், தேசிய உணர்வு ஆகியவற்றிற்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்ததில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய இணையற்ற பங்களிப்பு, நமது தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். அவரது ஆழ்ந்த ஞானமும் காலத்தால் அழியாத கொள்கைகளும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வழிகாட்டும் சக்தியாகத் திகழ்கின்றன என்று பிரதமர் கூறியுள்ளார். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான தேசத்தின் கூட்டு உறுதிப்பாட்டிற்கு அவரது ஆன்மீகச் செய்தி தொடர்ந்து ஊக்கமளித்து, ஆற்றலூட்டும் என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"சுவாமி விவேகானந்தரின் நினைவு தினத்தில் ஆழ்ந்த மரியாதையைச் செலுத்துகிறேன். இந்தியக் கலாச்சாரம், ஆன்மீகம், தேசிய உணர்வு ஆகியவற்றிற்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்த அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது. அவரது ஞானமும் எழுச்சியூட்டும் சிந்தனைகளும் இப்போதும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வழிகாட்டி வருகின்றன. வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டியெழுப்பும் தனது உறுதியை நனவாக்குவதில், அவரது ஆன்மீகச் செய்தி தேசத்திற்குப் புதிய ஆற்றலையும் வழிகாட்டுதலையும் தொடர்ந்து வழங்கும்."

***

(Release ID: 2281004)

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2281050) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Gujarati , Odia , Malayalam