தேசிய மனித உரிமைகள் ஆணையம்
மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் மருத்துவமனை அலட்சியத்தால் சிறு குழந்தை ஒன்று தனது பார்வையை இழந்ததாக வெளியான செய்தி குறித்து குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு
प्रविष्टि तिथि:
03 JUL 2026 7:47PM by PIB Chennai
மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள பண்டா அரசு மருத்துவமனையில், மருத்துவ அலட்சியம் காரணமாக ஒன்றரை வயதுக் குழந்தை தனது பார்வையை இழந்ததாக வெளியான ஊடகச் செய்தியைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. சளி மற்றும் கண் சிவத்தல் பிரச்சனைக்காக அந்தக் குழந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது மருத்துவர்கள் மூக்கில் செலுத்த வேண்டிய சொட்டு மருந்தை தவறுதலாக குழந்தையின் கண்களில் செலுத்தியதாகவும், அதன் விளைவாக ஏற்பட்ட தொற்று காரணமாகக் குழந்தை தனது பார்வையை இழந்ததாகவும் கூறப்படுகிறது.
ஊடகச் செய்தி உண்மையாக இருந்தால், அது மனித உரிமை மீறல் தொடர்பான சிக்கல்களை எழுப்பும் என்று ஆணையம் கருதுகிறது. எனவே, இது குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்தியப் பிரதேச மாநிலத் தலைமைச் செயலாளருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2026 ஜூன் 30 அன்று வெளியான ஊடகச் செய்தியின்படி, அந்தச் சம்பவத்திற்குப் பின், சம்பந்தப்பட்ட குழந்தை மேல் சிகிச்சைக்காக முதலில் மாவட்ட மருத்துவமனைக்கும், பின்னர் போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும், குழந்தையின் பார்வையை சரிசெய்ய முடியாது என்று குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280890®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2280973)
आगंतुक पटल : 5