கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடல்சார் முதலீட்டு நிதியம் குறித்த தொழில்துறை ஆலோசனைக் கூட்டம்

प्रविष्टि तिथि: 03 JUL 2026 6:54PM by PIB Chennai

சாகர்மாலா ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் எஸ்பிஐ வென்ச்சர்ஸ் லிமிடெட்  ஆகியவற்றுடன் இணைந்து, கடல்சார் முதலீட்டு நிதியம்  குறித்த தொழில்துறை ஆலோசனைக் கூட்டத்தை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் இன்று நடத்தியது. நிதியத்தின் வடிவமைப்பு, உத்தி மற்றும் செயல்படுத்தல் குறித்து விவாதிக்க, இந்தியாவின் கடல்சார் மற்றும் நிதிச் சூழலியலைச் சேர்ந்த முக்கிய பங்குதாரர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

 

 

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் செயலாளர் திரு விஜய் குமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கப்பல் நிறுவனங்கள், துறைமுகச் செயல்பாட்டாளர்கள், கப்பல் கட்டும் தளங்கள், கடல்சார் வாரியங்கள், வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், தனியார் பங்கு மற்றும் உள்கட்டமைப்பு நிதியங்கள் மற்றும் இதர தொழில் சங்கங்களின் மூத்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

 

 

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் வெளியிட்ட ஒரு செய்தியில், “பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், இந்தியாவின் கடல்சார் துறை ஒரு முக்கியமான வளர்ச்சி சார்ந்த தசாப்தத்திற்குள் நுழைகிறது. நாம் உலகத் தரம் வாய்ந்த துறைமுகங்களைக் கட்டும்போதும், கப்பல் கட்டும் தொழிலை விரிவுபடுத்தும்போதும், உள்நாட்டு நீர்வழிகளை நவீனமயமாக்கும்போதும், நமது தளவாடச் சூழலியலை வலுப்படுத்தும்போதும், நீண்ட கால வளர்ச்சிக்கான மூலதனத்தைப் பெறுவது மிகவும் முக்கியமானதாக இருக்கும். கடல்சார் முதலீட்டு நிதியம், பொறுமையான மூலதனத்தைத் திரட்டவும், தனியார் பங்கேற்பை ஊக்குவிக்கவும், கடல்சார் மதிப்புச் சங்கிலி முழுவதும் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் ஒரு வினையூக்கித் தளமாக உருவாக்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் இணைந்து, புத்தாக்கத்தை ஊக்குவிக்கும், வேலைவாய்ப்பை உருவாக்கும் மற்றும் 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதில் பங்களிக்கும் உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த ஒரு கடல்சார் பொருளாதாரத்திற்கு அடித்தளமிடுகிறோம்” என்று கூறியுள்ளார்.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280864&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2280969) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi