கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது சரக்கு கண்டெய்னர் கப்பல், கடல்சார் துறையில் தன்னிறைவு பெறுவதற்கான முக்கிய நடவடிக்கையாகும்: மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால்

प्रविष्टि तिथि: 03 JUL 2026 6:17PM by PIB Chennai

இந்தியாவின் கடல்சார், உற்பத்தித் துறைகளில் ஒரு முக்கிய நடவடிக்கையாக, உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் உள்ள 'மேர்ஸ்க்-கான்கார்' உள்நாட்டு கண்டெய்னர் கிடங்கில், உலகளவில், கப்பல் போக்குவரத்து நிறுவனமான 'ஏ.பி. மோல்லர்-மேர்ஸ்க்' நிறுவனத்திற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது ஏற்றுமதி-இறக்குமதி கப்பல் சரக்குக் கண்டெய்னரை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து,  நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் இன்று அறிமுகப்படுத்தினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தன்னிறைவு இந்தியா, 'மேக் இன் இந்தியா', 'கடல்சார் திட்டங்களை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியான அர்ப்பணிப்பு உணர்வை இந்த நிகழ்வு பிரதிபலிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார்.

இந்தியாவின் வளர்ந்து வரும் கொள்கலன் உற்பத்திச் சூழல் அமைப்பின் மீதான வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக, இந்நிகழ்ச்சியின் போது 'மேர்ஸ்க்' நிறுவனம் 'டிசிஎம் ஶ்ரீராம் குழுமத்திடம்' இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள மேலும் 1,000 கப்பல் சரக்குக் கொள்கலன்களுக்கான கொள்முதல் ஆணைகளையும் வழங்கியது. இது ஒரு நீண்டகால வணிக ஒத்துழைப்பிற்கான தொடக்கத்தைக் குறிக்கிறது. இது உலகளவில் கடல்சார் மதிப்புச் சங்கிலியில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 2025-ல் பிரதமர் நரேந்திர மோடி, 'ஏ.பி. மோல்லர்-மேர்ஸ்க்' நிறுவனத்தின் கண்காணிப்பு வாரியத் தலைவர் ராபர்ட் மேர்ஸ்க் உக்லா இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து இந்த சாதனை நிகழ்ந்துள்ளது. அந்தச் சந்திப்பின்போது, இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த கண்டெய்னர் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் அந்நிறுவனத்தை கேட்டுக் கொண்டிருந்தார். 16 மாதங்களுக்குள், இந்தத் தொலைநோக்குத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு, சர்வதேசத் தரத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது ஏற்றுமதி - இறக்குமதி கப்பல் சரக்குக் கண்டெய்னர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால், "பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ், இந்தியா நம்பகமான உலகின் உற்பத்தி மையமாகவும், கடல்சார் வல்லரசு நாடாகவும் வேகமாக உருவெடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280831&reg=3&lang=1

(Release ID: 2280831)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2280964) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu