மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்களால் ஏற்படும் அவசரநிலைச் சூழல்களைக் கையாள்வதில் நாட்டின் தயார்நிலை குறித்த மூன்றாவது தேசிய அளவிலான ஒத்திகை

प्रविष्टि तिथि: 03 JUL 2026 7:11PM by PIB Chennai

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, தேசிய ஒரே  சுகாதார இயக்கம் திட்டத்தின் ஒரு பகுதியாக 'பஷுஜன்ய யுத் அப்யாஸ்' (PYA) என்ற மூன்றாவது தேசிய அளவிலான ஒத்திகையை வெற்றிகரமாக நடத்தியது. விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்களால் ஏற்படும் அவசரநிலைச் சூழல்களைக் கையாள்வதில் நாட்டின் தயார்நிலை, ஒருங்கிணைப்பு வழிமுறைகள் மற்றும் அவசரக்காலச் செயல்பாட்டுத் திறன்கள் ஆகியவற்றைச் சோதித்து உறுதி செய்வதே இந்த ஒத்திகையின் நோக்கமாகும்.

 

மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் உள்ள காரி கிராமத்தில், 2026 ஜூன் 29 முதல் ஜூலை 3 வரை இந்தப் பயிற்சி நடைபெற்றது. ஒரே ஆரோக்கியம் அணுகுமுறையை மையமாகக் கொண்ட இப்பயிற்சியில், விலங்கு சுகாதாரம், மனித சுகாதாரம், வனவிலங்கு பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, ஆய்வகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பங்குதாரர்கள் ஒன்றிணைந்தனர். செயல்பாட்டுத் தயார்நிலை, துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றை மதிப்பிடுவதையும், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோயின் தாக்கத்தை ஆரம்பக்கட்ட எச்சரிக்கை முதல் அதைக் கட்டுப்படுத்துவது வரையிலான செயல்முறைகளை நிர்வகிப்பதற்கான வழிமுறைகளைச் சோதிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்தப் பயிற்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.

 

நிறைவு நாளான இன்று, கால்நடை பராமரிப்பு ஆணையர் தலைமையில், ஒரு விளக்கக் கூட்டம் நடைபெற்றது. பயிற்சியின் போது பதிவு செய்யப்பட்ட முக்கிய விஷயங்களை மதிப்பாய்வு செய்யவும், கண்டறியப்பட்ட இடைவெளிகளைப் பற்றி விவாதிக்கவும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவும் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. அவசரகால பதில் நெறிமுறைகளை வலுப்படுத்துதல், துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் மற்றும் கால்நடை சுகாதார அவசரநிலைகள் மற்றும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்களின் பரவலைத் திறம்பட நிர்வகிப்பதற்கான திறனை வளர்த்தல் ஆகியவற்றில் இந்த ஆலோசனைகள் கவனம் செலுத்தின.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280871&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2280955) आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Urdu