வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு புத்தொழில் நிறுவனங்களுக்கு, நிதி ஒதுக்கீட்டிற்குப் பிந்தைய முறையான வழிகாட்டுதல் பயிற்சி

प्रविष्टि तिथि: 03 JUL 2026 4:21PM by PIB Chennai

புத்தொழில்புத்தாக்கச் சூழலமைப்பை வலுப்படுத்துவதில் தொடர்ந்து  இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில்தொழில்உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறைஇந்திய வர்த்தக-தொழில் சபைக் கூட்டமைப்புமெர்சிடிஸ்-பென்ஸ் பாரத் புத்தாக்கம்சவாலான வணிக யோசனைகள் திட்டத்தின் கீழ்காணொளி வாயிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது.

உற்பத்திநிலைத்தன்மைகல்விகார்பன் வெளியேற்றத்தைக் குறைத்தல்ஆட்டோமொபைல்/மின்சார வாகனங்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகளில்புதுமையானவிரிவாக்கம் செய்யக்கூடிய தீர்வுகளை உருவாக்கும் அதிக ஆற்றல் கொண்ட இந்திய புத்தொழில்  நிறுவனங்களைக் கண்டறிந்து உதவிடும் நோக்கில்,  இந்திய வர்த்தக-தொழில் சபைக் கூட்டமைப்புமெர்சிடிஸ்-பென்ஸ் பாரத் புத்தாக்கம்,  சவாலான வணிக யோசனைகள் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்  உரையாற்றிய தொழில்உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் கூடுதல் செயலாளர் திரு. அதீஷ் குமார் சிங்இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதற்காக இந்திய வர்த்தக-தொழில் சபைக் கூட்டமைப்புமெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனங்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த முயற்சிஇந்தியாவின் புத்தாக்கச் சூழலமைப்பின் வளர்ந்து வரும் வலிமையையும்நாட்டின் இளம் தொழில்முனைவோரின் மகத்தான ஆற்றலையும் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார். சரியான தருணத்தில் வழிகாட்டுதலையும்உதவியையும் வழங்குவதன் மூலம்தேசிய முன்னுரிமைகளுக்கு ஏற்ப தீர்வுகளை உருவாக்க இத்திட்டம் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். புத்தாக்க நடவடிக்கைகளால்  வழிநடத்தப்படும் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கும்உலகளவில்முன்னணி நாடாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதற்கும்இத்தகைய கூட்டு முயற்சிகள் அவசியமானவை என்று அவர் மேலும் கூறினார்.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகதேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும்முதலீட்டிற்குத் தயாராகும் தன்மையை மேம்படுத்துவதற்கும்நிதிக்குப் பிந்தைய வழிகாட்டுதல்உதவி வழங்கும் ஒரு கட்டமைக்கப்பட்ட திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிமுக்கிய வணிகம்ஒழுங்குமுறைநிதிசட்டம்முதலீடுதொழில்நுட்பத் துறைகளில் இலக்கு சார்ந்த உதவிகளை வழங்கும். இதன் மூலம்புத்தொழில் நிறுவனங்கள் விரிவாக்கக்கூடியமீள்திறன் கொண்டஉலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த நிறுவனங்களை உருவாக்க இயலும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280737&reg=3&lang=1

***

SS/SV/SH


(रिलीज़ आईडी: 2280878) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी