தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் பரூச், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மொபைல் நெட்வொர்க் தரத்தை டிராய் ஆய்வு செய்தது

प्रविष्टि तिथि: 03 JUL 2026 12:25PM by PIB Chennai

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), குஜராத் மாநிலத்தின் பரூச் நகரம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த மே மாதம் கள ஆய்வு மேற்கொண்டு மொபைல் நெட்வொர்க் சேவையின் தரத்தை மதிப்பீடு செய்துள்ளது. குரல் அழைப்பு, தரவு சேவை, சிக்னல் கிடைக்கும் தன்மை, அழைப்பு துண்டிப்பு, பதிவிறக்க, பதிவேற்ற வேகம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. ஏர்டெல், பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களின் சேவைகள் இதில் மதிப்பிடப்பட்டன. பதிவிறக்க வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ முன்னிலை பெற்றுள்ளது. ஏர்டெலும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, அடுத்த கட்ட நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இந்த விவரங்கள், வாடிக்கையாளர்கள் தங்களது பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவையின் தரத்தை அறிய உதவுவதுடன், நிறுவனங்கள் தங்களின் சேவையை மேலும் மேம்படுத்தவும் வழிகாட்டியாக அமையும். இது குறித்த விரிவான அறிக்கை ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280635&reg=3&lang=1

***

SS/PD/KR

 


(रिलीज़ आईडी: 2280776) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati