இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சைக்கிளிங் விளையாட்டை மேம்படுத்தும் செயல் திட்டம் - மத்திய இணையமைச்சர் திருமதி ரக்ஷா கட்சே ஆய்வு

प्रविष्टि तिथि: 02 JUL 2026 8:04PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி. ரக்ஷா கட்சே, இன்று (02.07.2026) இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திரு மனிந்தர் பால் சிங், கூட்டமைப்பின் மூத்த அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து, சைக்கிளிங் விளையாட்டுச் சூழலமைப்பை வலுப்படுத்துவதற்கான செயல் திட்டம் குறித்து விவாதித்து ஒரு விரிவான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.

 

அடிமட்டத் திறமையாளர்களைக் கண்டறிதல், சமூகப் பங்கேற்பு, சிறந்த பயிற்சி, சர்வதேச அனுபவம் என சைக்கிளிங் வீரர்களுக்கான ஒரு கட்டமைக்கப்பட்ட பாதையை உருவாக்குவதில் இந்தக் கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தின.

 

சைக்கிளிங் விளையாட்டு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், பெண்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதிலும், உயர் செயல்திறன் கொண்ட விளையாட்டு வீரர்களை ஆதரிப்பதிலும், உலகத் தரம் வாய்ந்த விளையாட்டுச் சூழலமைப்பை உருவாக்குவதிலும் மத்திய அரசின் உறுதிப்பாட்டை இந்தக் கூட்டம் மீண்டும் எடுத்துரைப்பதாக அமைந்தது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280522&reg=3&lang=1

(Release ID : 2280522)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2280585) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi