மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
மின்னணு ஆளுகைக்கான தேசிய மாநாடு 2026-ல், பாஷினியின் பன்மொழி ஏஐ கண்டுபிடிப்புகள்
प्रविष्टि तिथि:
02 JUL 2026 7:12PM by PIB Chennai
மத்திய அரசின் நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை ராஜஸ்தான் மாநில அரசுடன் இணைந்து நடத்திய 'மின் ஆளுகைக்கான தேசிய மாநாடு 2026'-ல் (NCeG 2026), டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவு தனது வலுவான இருப்பை வெளிப்படுத்தியது. நேரடி செயல்விளக்கங்கள், பன்மொழி செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகள் மற்றும் ஊடாடும் அனுபவங்கள் ஆகியவற்றின் மூலம், மொழி சார்ந்த செயற்கை நுண்ணறிவு எவ்வாறு மின்னணு ஆளுகையை அனைவரையும் உள்ளடக்கியதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும், குடிமக்களை மையமாகக் கொண்டதாகவும் மாற்றுகிறது என்பதை பாஷினி இதில் காட்சிப்படுத்தியது.
இந்த மாநாட்டின் போது, மார்வாரி, மேவாரி, துந்தாரி, ஹடோதி, மேவாதி மற்றும் பாக்ரி ஆகிய மொழிகளுக்கான உயர்தர மொழித் தரவுத்தொகுப்புகளை உருவாக்குவதன் மூலம் ராஜஸ்தானின் வட்டார மொழிகளுக்கான செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ராஜஸ்தான் மொழி மாதிரிப் பயிற்சி ஹேக்கத்தான் முயற்சியையும் பாஷினி தொடங்கிவைத்தது.
பாஷினி அரங்கத்தை ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன் லால் சர்மா, ராஜஸ்தான் அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்புத் துறை அமைச்சர் திரு ராஜ்யவர்தன் ரத்தோர், மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் பலர் பார்வையிட்டனர்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பில், டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அமிதாப் நாக் பங்கேற்றார். அப்போது, மொழிக்கு முன்னுரிமை அளிக்கும் புத்தாக்கங்கள் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் நிர்வாகத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி, மாநிலத்திற்கான பன்மொழி செயற்கை நுண்ணறிவு மற்றும் மொழித் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது குறித்து ராஜஸ்தான் முதலமைச்சருடன் அவர் கலந்துரையாடினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280490®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2280579)
आगंतुक पटल : 8