தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளை முயற்சிக்கு இந்திய கடற்படைக் கப்பல் திரிகண்ட் பதிலடி

प्रविष्टि तिथि: 02 JUL 2026 6:11PM by PIB Chennai

01 ஜூலை 2026 அன்று, ஏடன் வளைகுடாவில் செயின்ட் வின்சென்ட் - கிரெனடைன்ஸ் கொடியுடைய எம்.வி. கோல்டன் ஆர்சனல் என்ற சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட கடற்கொள்ளை முயற்சிக்கு இந்திய போர்க்கப்பலான திரிகண்ட் பதிலடி கொடுத்து அதை முறியடித்தது.

 

ஏமன் நாட்டின் ஏடன் நகரிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த வர்த்தகக் கப்பல் ஒன்று, ஜிபூட்டிக்குக் கிழக்கு-வடகிழக்கே சுமார் 300 கடல் மைல் தொலைவில் கடற்கொள்ளையர் தாக்குதல் முயற்சி நடந்ததாகத் தகவல் அளித்தது. இந்தக் கடற்கொள்ளை சம்பவம் குறித்து, இந்தியப் பெருங்கடல் பிராந்திய தகவல் ஒருங்கிணைப்பு மையத்துடன் ஒருங்கிணைந்து தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஐஎன்எஸ் திரிகண்ட் நீர்மூழ்கிக் கப்பல், அந்த வர்த்தகக் கப்பல் இருந்த பகுதிக்குச் சென்றது.

 

ஒரு இந்தியர் உட்பட 21 பணியாளர்களை ஏற்றிச் சென்ற வர்த்தகக் கப்பலின் மேல்தளக் கட்டமைப்பு, அதனை ஒட்டிய அறைகள் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பணியாளர்கள் கப்பலின் பாதுகாப்பு அரணில் தஞ்சம் புகுந்ததாகவும், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

26 ஜூலை 02 ஆம் தேதி காலை, ஐஎன்எஸ் திரிகண்ட் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஒரு சோதனைக் குழு, எம்வி கோல்டன் ஆர்சனல் கப்பலைத் தூய்மைப்படுத்தவும் நிலைமையை மதிப்பிடவும் அதில் ஏறியது. முழுமையான சோதனையைத் தொடர்ந்து, கப்பலில் சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரும் கண்டறியப்படவில்லை. அதனைத் தொடர்ந்து, கப்பல் குழுவினர் பாதுகாப்பாகக் கப்பலிலிருந்து வெளியேறி, இந்தியக் கடற்படை வீரர்களுடன் இணைந்து கப்பலின் நிலையை மதிப்பிடத் தொடங்கினர்.

 

கப்பல் சரி செய்யப்பட்டு, அச்சுறுத்தல் முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐஎன்எஸ் திரிகண்டின் கடற்கொள்ளையர் எதிர்ப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தன. அதனைத் தொடர்ந்து எம்வி கோல்டன் ஆர்சனல் தனது பயணத்தைத் தொடர்ந்தது.

 

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பிற்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, இந்தியக் கடற்படையானது தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280434&reg=3&lang=1

(Release ID : 2280434)

****

TV/PLM/SH

 


(रिलीज़ आईडी: 2280570) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , हिन्दी