கலாசாரத்துறை அமைச்சகம்
கலைப் பண்பாட்டு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்பு
प्रविष्टि तिथि:
02 JUL 2026 6:05PM by PIB Chennai
மத்திய கலாச்சார அமைச்சகம், 2026-27 ஆம் மானிய ஆண்டிற்கான கலா சம்ஸ்கிருதி விகாஸ் யோஜனா எனப்படும், கலைப் பண்பாட்டு மேம்பாட்டுத் திட்டத்தின் பல்வேறு அம்சங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. நாடு முழுவதிலுமுள்ள தகுதியுள்ள கலாச்சார அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள், கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், நிறுவனங்கள், அந்தந்தப் பிரிவுகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
கலை, கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும், கலைஞர்கள், கலாச்சார அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், பல்வேறு கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்குவதன் மூலம், இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், மேம்படுத்துதல், வலுப்படுத்துவது ஆகியவற்றை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது
திட்ட வழிகாட்டுதல்களின்படி, விண்ணப்பங்களை அதற்கெனக் குறிப்பிடப்பட்டுள்ள நேரடி அல்லது இணையவழி முறையில் சமர்ப்பிக்கலாம்.
தகுதி, வழிகாட்டுதல்கள், விண்ணப்பம் தொடர்பான விவரங்கள் கலாச்சார அமைச்சகத்தின் https://culture.gov.in/offering/schemes-and-services என்ற இணையதளத்தில் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280430®=3&lang=1
(Release ID : 2280430)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2280569)
आगंतुक पटल : 9