ரெயில்வே அமைச்சகம்
ரூர்கேலா-போண்டமுண்டா பிரிவில் மேம்பாலத் திட்டத்திற்கு ரயில்வே ஒப்புதல்
प्रविष्टि तिथि:
02 JUL 2026 5:48PM by PIB Chennai
சரக்குக் கொள்ளளவுக்கும், செயல்பாட்டுத் திறனுக்கும் பெரும் ஊக்கமளிக்கும் வகையில், தென்கிழக்கு ரயில்வேயில் உள்ள போண்டமுண்டா 'ஏ' கேபினிலிருந்து போண்டமுண்டா லிங்க் 'பி' கேபின் வரை 4.59 கிலோ மீட்டர் நீளமுள்ள ரயில் மேம்பாலம் ஒன்றை ₹135 கோடி செலவில் கட்டுவதற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
விரிவடைந்து வரும் சுரங்க, எஃகு உற்பத்தி நடவடிக்கைகளின் காரணமாக, சரக்குப் போக்குவரத்து வேகமாக அதிகரித்து வரும் ஒரு தொழில்துறை வழித்தடமான, ரூர்கேலா-போண்டமுண்டா பிரிவில் நெரிசலைக் குறைப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
செயில் நிறுவனத்தின் பார்சுவா-தல்டிஹ்-கல்டா சுரங்க வளாகத்தின் விரிவாக்கம், ரூர்கேலா எஃகு ஆலையில் மேம்படுத்தப்பட்ட உற்பத்தி ஆகியவற்றின் காரணமாக, ரூர்கேலா-போண்டமுண்டா பிரிவில் சரக்குப் போக்குவரத்து கணிசமான வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில், ரயில்வே, இந்தப் புதிய ரயில் மேம்பாலம் கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280419®=3&lang=1
(Release ID : 2280419)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2280525)
आगंतुक पटल : 6