இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
இளைஞர் மேம்பாட்டிற்காக தொழில்துறை சங்கங்களின் மாநாடு நாளை நடைபெறுகிறது
प्रविष्टि तिथि:
02 JUL 2026 4:52PM by PIB Chennai
மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு அமைச்சகத்தின் இளைஞர் விவகாரத்துறை, 'மை பாரத்' அமைப்பின் மூலம் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான ஒரு கூட்டு செயல் திட்டத்தை உருவாக்குவதற்காக, மூத்த அரசு அதிகாரிகள், தொழில்துறை தலைவர்கள், பெருநிறுவன அறக்கட்டளைகள் போன்றவர்களை ஒன்றிணைத்து, நாளை (2026 ஜூலை 3) புதுதில்லியில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சர்வதேச மையத்தில் தொழில்துறை சங்கங்களின் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த மாநாட்டில், மத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். இளைஞர் விவகாரங்கள் துறையின் செயலாளர் டாக்டர் பல்லவி ஜெயின், கூடுதல் செயலாளர் திரு நிதேஷ் குமார் மிஸ்ரா, இணைச் செயலாளர் திரு ஷிவ் ரத்தன், மை பாரத் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் பிரியங்கா சுக்லா உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் இதில் பங்கேற்பார்கள்.
இந்த மாநாடு, இளைஞர்கள் தலைமையிலான வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக அரசு, தொழில்துறை சங்கங்கள், பெருநிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையே ஒரு கட்டமைக்கப்பட்ட ஒத்துழைப்பை உருவாக்க முயலும். தேசிய அளவில் தன்னார்வத் தொண்டு வாய்ப்புகள், உள்ளகப் பயிற்சிகள், திறன் மேம்பாட்டு முயற்சிகள், தொழில்முனைவோர் ஆதரவு, பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்கள், இளைஞர்களை மையமாகக் கொண்ட பிற முயற்சிகளை விரிவுபடுத்துவதற்கு 'மை பாரத்' தளத்தைப் பயன்படுத்துவது குறித்தும் இந்த மாநாட்டுக் கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்படும்.
நாள் முழுவதும் நடைபெறும் இந்த மாநாட்டில் அமைச்சரின் தொடக்கவுரை, சிறப்புரையும், அதனைத் தொடர்ந்து கருப்பொருள் சார்ந்த கலந்துரையாடல் அமர்வுகளும் இடம்பெறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280371®=3&lang=1
(Release ID : 2280371)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2280456)
आगंतुक पटल : 10