இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

நிப்பான் லைஃப் இந்தியா பங்குகளைக் கையகப்படுத்த டிடபிள்யூஎஸ் குழுமத்திற்கு இந்திய வணிகப் போட்டி ஆணையம் ஒப்புதல்

प्रविष्टि तिथि: 01 JUL 2026 6:16PM by PIB Chennai

உலகளாவிய சொத்து மேலாண்மை நிறுவனமான டிடபிள்யூஎஸ் குழுமம் , நிப்பான் லைஃப் இந்தியா ஏஐஎஃப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் பங்குகளைக் கையகப்படுத்துவதற்கு இந்திய வணிகப் போட்டி ஆணையம்  ஒப்புதல் அளித்துள்ளது.

 

டிடபிள்யூஎஸ் குழுமம் சர்வதேச அளவில் முதலீட்டுத் தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமாகும். நிப்பான் லைஃப் இந்தியா நிறுவனம், மாற்றுச் சொத்து மேலாண்மை மற்றும் செபியில் பதிவு செய்யப்பட்ட முதலீட்டு நிதிகளுக்கு மேலாளராகச் செயல்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் மாற்று முதலீட்டு நிதிகளின் செயல்பாடுகள் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தையில் ஏகபோகத்தைத் தவிர்க்கும் நோக்கில், முறையான ஆய்வுகளுக்குப் பிறகே  இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்த முதலீடு, இந்தியாவின் நிதிச் சந்தையில் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279988&reg=3&lang=1

செய்தி அடையான எண்:2279988

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2280159) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी